அமெரிக்காவுக்கு மீண்டும் சுதந்திர தேவி சிலை; பிரான்ஸ் பரிசு!

Date:

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலக புகழ்பெற்ற சுதந்திர தேவி சிலை அமைந்துள்ளது.

ஹட்சன் ஆற்றின் துறைமுகத்தில் உள்ள லிபர்ட்டி தீவில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் நிறுவப்பட்டுள்ள சுதந்திர தேவி சிலை 305 அடி உயரமும், 204.1 டன் எடையும் கொண்டது.

அமெரிக்கா சுதந்திரம் அடைந்து நூறாண்டு ஆன போது பிரான்ஸ் நாடு சுதந்திர தேவி சிலையை வடிவமைத்து அமெரிக்காவுக்கு பரிசாக வழங்கியது.

கப்பல் மூலம் அனுப்பப்பட்ட சிலை 1886-ம் ஆண்டு அக்டோபர் 28-ந் தேதி அமெரிக்க மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

இந்த நிலையில் அமெரிக்காவுக்கு பிரான்ஸ் மற்றொரு சுதந்திர தேவி சிலையை செய்து பரிசாக அனுப்பி இருக்கிறது. அமெரிக்காவின் சுதந்திர தினம் வருகிற ஜூலை 4 நடைபெறுகிறது.

சுதந்திர தேவி சிலை

இதையடுத்து மினி சுதந்திர தேவி சிலையை பிரான்ஸ் தயாரித்தது. அந்த சிலை 3 மீட்டர் (கிட்டத்தட்ட 10 அடி) உயரம் கொண்டது. அந்த புதிய சுதந்திர தேவி சிலை நேற்று பிரான்சில் இருந்து கப்பலில் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டது.

புதிய சுதந்திர தேவி சிலை அமெரிக்க சுதந்திர நாளான ஜூலை 4-ந் தேதி நியூயார்க் நகரை சென்றடையும். எல்லீஸ் தீவில் நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்டத்தில் சிலை காட்சிப்படுத்தப்படும்.

spot_imgspot_img

More like this
Related

ஈரான் தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்தது ஓமான்

தன் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் தூதரிடம் ஓமான் ஞாயிற்றுக்கிழமை...

மாணவர்களை டெங்கு காய்ச்சலிலிருந்து பாதுகாக்க, சீருடை விதிகளைத் தளர்த்த பாடசாலைகளுக்கு அனுமதி

டெங்குவிலிருந்து மாணவர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நுளம்புக்கடியிலிருந்து சிறந்த பாதுகாப்பை...

சம்பந்தனுக்கு பொது இடத்தில் நினைவுத்தூபி அமைக்கக்கூடாது

இலங்கை தமிழரசு கட்சியின் மறைந்த முன்னாள் தலைவர் இரா. சம்பந்தன் இரண்டு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்