காரணமின்றி கொழும்பிற்குள் நுழைய முயன்ற 803 பேர் திருப்பி விடப்பட்டனர்!

Date:

அத்தியாவசிய சேவைகள் என்ற போர்வையில் கொழும்புக்குள் நுழைய முயன்ற 800 க்கும் மேற்பட்டோர் நேற்று பொலிசாரால் திருப்பி விடப்பட்டனர்.

நேற்று நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி,  28,784 வாகனங்கள் கொழும்புக்குள் நுழைந்தன. அவற்றில் 4,802 வாகனங்கள் சுகாதார சேவையை சேர்ந்தவை.

நேற்று, பயண தடையை மீற முயன்ற 803 பேருக்கு அறிவுறுத்தப்பட்டு திருப்பி விடப்பட்டதாக டி.ஐ.ஜி அஜித் ரோஹன தெரிவித்தார்.

இதேவேளை, மாகாணங்களிற்கிடையிலான கட்டுப்பாட்டை மீற முயற்சித்த 54 வாகனங்களில் 107 பேர் திருப்பி விடப்பட்டுள்ளனர்.

இன்று நிறங்களிலான ஸ்டிக்கர் ஒட்டப்படுவதால், கொழும்புக்குள் நுழையும் இடங்களில் நெரிசல் ஏற்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

நாளை சில பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயில்

முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் நாளை...

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி மறைவு

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி காலமானார். அவருக்கு வயது...

பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு: லண்டன் கூட்டாளிக்கு பிடிவிறாந்து!

மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு இடம்பெற்ற 5 கொலைச் சம்பவம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்