மத்திய பிரதேச மாநிலத்தில் விலையும் நூர்ஜகான் ரக மாம்பழம், ஒரு மாம்பழம் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன. நாட்டிலேயே அந்த பகுதியில் மட்டும் தான் இந்த ரக மாம்பழங்கள் விற்பனையாவதால் அதிக விலையில் விற்கப்படுகிறது.
மத்திய பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டத்தில் “நூர்ஜகான்” ரக மாம்பழங்கள் விளைவிக்கப்படுகிறது. அந்த மாம்பழம் தான் ஒரு மாம்பழம் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நூர்ஜகான் ரக மாம்பழம் ஆப்கான் பகுதியை தாயகமாக கொண்டது அப்பகுதியில் தான் இந்த ரக மாம்பழங்கள் விளைவிக்கப்படுகிறது. இந்தியாவில் இந்த ரக மரம் அலிராஜ்பூர் மாவட்டத்தில் மட்டுமே உள்ளது. அதுவே இந்த அதிக விலை விற்பனைக்கு முக்கியமான காரணம்.
இந்த அலிராஜ்பூர் மாவட்டம் மத்தியபிரதேசம் குஜராத் மாநில எல்லையில் அமைந்துள்ளது. இந்த ரக மாம்பழத்தை அதிகமாக குஜராத்தை சேர்ந்தவர்கள் வாங்கி செல்கின்றனர். இந்த மாம்பழத்தின் சிறப்பம்சன் இதன் சைஸ் தான். ஒரு பழம் சுமார் 2 கிலோ முதல் 3.5 கிலோ வரை இருக்கிறது. கடந்தாண்டை விட இந்தாண்டு மாம்பழ விளைச்சல் அமோகமாக இருக்கிறது.