உதவி வழங்க செல்லும் போது உடம்பை காட்டிக் கொண்டு செல்லாமல், சேலையில் செல்லுங்கள் என நெட்டிசன்கள் தர்ஷ குப்தாவுக்கு புத்திமதி கூறியுள்ளனர்.
விஜய் டிவியின் செந்தூரப்பூவே சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் தர்ஷா குப்தா. அவர் குக் வித் கோமாளி 2ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். ஆனால் அவர் பாதியிலேயே எலிமினேட் செய்யப்பட்டார்.
இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் தர்ஷா குப்தா எப்போதும் ஆக்டிவாக இருந்து, கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ஊரடங்கு காலத்தில் கவர்ச்சி படங்களை வெளியிட்டு, ரசிகர்களை தாரளமாக வளைத்துப் போட்டு வைத்துள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களாக தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு போடப்பட்டு இருந்தது. அந்த நேரத்தில் ஏழை மக்கள், சாலையோரம் வசிப்பவர்கள் என பல தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு உதவி செய்வதற்காக களமிறங்கினர் தர்ஷா குப்தா.
மீனவ பெண்களுக்கு உணவு தானியங்கள், திருநங்கைகளுக்கு வீடு தேடி சென்று உதவி, சாலையோரம் வசிப்பவர்களுக்கு தினம்தோறும் உணவு என பல்வேறு உதவிகளை செய்தார் தர்ஷா குப்தா.
அதனால் தர்ஷாவுக்கு அதிகம் பாராட்டும் குவிந்தது. தற்போது தர்ஷா போலீஸ்காரர்களுக்கு உதவி செய்து இருக்கிறார். அதனை புகைப்படங்கள் எடுத்து தர்ஷா வெளியிட்டு இருக்கிறார்.
தர்ஷா போலீஸுக்கு உதவி செய்ததை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளதை பார்த்த நெட்டிசன்கள் அவரை அதிகம் பாராட்டினார்கள். அவர் தான் அடுத்த தெரசா என்று ஒரு ரசிகர் கமெண்ட் போட்டிருந்தார். அந்த அளவுக்கு பாராட்டு குவிந்திருந்தது.
அதே நேரத்தில் தர்ஷா போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறேன் என சொல்லி மாஸ்க்கை கழற்றி இருந்தார். பொது இடத்தில் அப்படி செய்யாதீங்க என தர்ஷாவுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளனர்.
மேலும் தர்ஷா அணிந்திருந்த உடை பற்றியும் சில நெட்டிசன்கள் விமர்சித்து இருந்தனர். அவர் ஒர்கவுட் உடையில் சென்றிருந்த நிலையில், அப்படிப்பட்ட உடைகளை போட்டுகொண்டு போகவேண்டாம் எனவும், அது அசிங்கமாக இருக்கிறது, அதனால் புடவை கட்டிட்டு போங்க எனவும் ரசிகர் ஒருவர் கமெண்ட் செய்து இருக்கிறார்.
மேலும் பல ரசிகர்களும் தர்ஷா சேலை அணிந்தால் தான் அழகாக இருக்கிறது எனவும் கமெண்டில் கூறி வருகின்றனர்.
Saree la poonga ka super ra irukum ipti model ah pogathinga plzzz..😔😍saree la poonga 😍ithu romba asigama iruku 😍plz… Ka saree la poonga
— Thala Bakthan (@Anand06260134) June 6, 2021