30.6 C
Jaffna
April 6, 2025
Pagetamil
விளையாட்டு

இந்திய அணிக்கு எச்சரிக்கை, ‘மரண மாஸ்’ காட்டிய நியூசிலாந்து!

இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

நியூசிலாந்து அணி

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து, நியூசிலாந்து இடையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்துள்ளது. இருப்பினும், இப்போட்டியில் இங்கிலாந்தைவிட நியூசிலாந்து அணிதான் அதிகமுறை ஆதிக்கம் செலுத்தியது.

டாஸ் வென்று முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 378/10 ரன்கள் குவித்தது. கேன் வில்லியம்சன் போன்ற முக்கிய வீரர்கள் சொதப்பிய நிலையில், அறிமுக வீரர் டிவோன் கான்வே இரட்டை சதம் அடித்து அசத்தினார். ஹென்ட்ரி நிகோலஸும் (61) அரை சதம் அடித்திருந்தார்.

அடுத்துக் களமிறங்கிய இங்கிலாந்து அணி 275/1 ரன்கள் மட்டுமே அடித்தது. ரோரி பர்ன்ஸ் (132) சதமடித்தார். இருப்பினும் மற்ற வீரர்கள் சிறப்பாக சோபிக்கவில்லை. நியூசிலாந்து பௌலர் டிம் சௌதீ 6 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். டால் பௌலர் கைல் ஜேமிசனும் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 169/6 டிக்ளேர் செய்து, 273 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்த நிலையில் இங்கிலாந்து 170/3 எடுத்திருந்தபோது போட்டி டிரா என அறிவிக்கப்பட்டது.

இப்போட்டியில் நியூசிலாந்து பௌலர்கள் சிறப்பாகப் பந்துவீசினர். இங்கிலாந்து மைதானங்கள் பொதுவாகவே ஸ்விங், வேகத்திற்குச் சாதகமாக இருக்கும். இதனால், ஸ்பின்னர்கள் பார்ட் டைம் பௌலர்களாக மட்டுமே இருக்க முடியும். இப்போட்டியிலும் இதே நிலைதான் இருந்தது.

இரண்டு தரப்பிலும் ஸ்பின்னர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. குறிப்பாக நியூசிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர்கள் பந்துகளை அற்புதமாக ஸ்விங் செய்து, பவுன்சர்களையும் துல்லியமாக வீசி பேட்ஸ்மேன்களை மிரட்டினர். இதற்கு முதன்மை காரணம், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து மைதானங்கள் ஒரே மாதிரி இருக்கும் என்பதால்தான். மேலும் அணியில் முக்கிய பேட்ஸ்மேன்கள் படுமோசமாகச் சொதப்பிய நிலையில் டிவோன் கான்வே, ஹென்ட்ரி நிகோலஸ் இருவரும் சேர்ந்து மட்டும் அணியின் ஸ்கோரை 378/10 ஆக உயர்த்தி எங்களிடம் வலிமையான பேட்டிங் லைன் அப் இருக்கிறது என்பதை வெளிக்காட்டியுள்ளனர். கிரிக்கெட் விமர்சகர்களும் இதே கருத்தைக் கூறிதான், உலக டெஸ்ட் சாம்பியான்ஷிப் தொடரில் நியூசிலாந்து வெற்றிபெற வாய்ப்பு அதிகம் எனத் தெரிவித்திருந்தனர்.

இந்திய அணிக்கு பின்னடைவு:

இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரையும் களமிறக்கத் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், இங்கிலாந்து மைதானங்களில் ஸ்பின்னர்கள் பார்ட் டைம் பௌலராக மட்டுமே இருக்க முடியும் என்பதால் இருவரில் ஒருவரை மட்டுமே களமிறக்க முடியும்.

டிம் சௌதீ, கைல் ஜேமிசன், நீல் வாக்னர் ஆகிய மூவரும் பந்துகளைத் தாறுமாறாக ஸ்விங் செய்து, பவுன்சர்களையும் வீசுவதால் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் சுலபமாக ரன்களை குவிக்க முடியாது என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

இதையும் படியுங்கள்

ஓய்வு குறித்து விராட் கோலி சூசகம்!

Pagetamil

ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் விரைவில்

Pagetamil

இலங்கையின் முதல் டெஸ்ட்… 1996 உலகக் கோப்பை கப்டனின் உதயம்

Pagetamil

புரட்டியெடுக்கும் அவுஸ்திரேலியா: காலியில் கதிகலங்கி நிற்கும் இலங்கை!

Pagetamil

அவுஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம்: இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னர் சம்பியன்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!