எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தால் தொழில்துறைகளிற்கு ஏற்பட்ட சேதங்களை ஆராய 5 துணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
இன்று அமைச்சர் அலி சப்ரி மற்றும் பல அமைச்சர்களின் தலைமையின் கீழ் நீதி அமைச்சில் ஒரு விவாதம் நடைபெற்றது.
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பாக அதிகபட்ச சேதக் கோரிக்கையைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சப்ரி கூறினார்.
இந்த விடயத்தில் தொகுக்கப்படும் தரவுகள் சட்டமா அதிபருக்கு அனுப்பப்படும் என்றார்.
இதேவேளை, கப்பலிற்கு பாதுகாப்பு வழங்குமாறு கடற்படை தளபதிக்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.




