வாழ்க்கையில் என்னை உயர்த்திய படம் ‘காக்கா முட்டை’.. 6 ஆண்டு நினைவை பகிர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ் !

Date:

இதயத்திற்கு நெருக்கமான படம் ‘காக்கா முட்டை’ படம்தான் எனது அடையாளம் என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் மணிகண்டன் இயக்கி விமர்சன ரீதியாக வெற்றிப்பெற்ற திரைப்படம் ‘காக்கா முட்டை’. இதில் ஒரு இளம் நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். இந்த படத்தில் பெரிய காக்கா முட்டையாக விக்னேஷூம், சின்ன காக்கா முட்டையாக ரமேஷூம் நடித்து கலக்கியிருந்தனர். இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறனும், நடிகர் தனுஷும் இணைந்து தயாரித்திருந்தனர்.

கடந்த 2015ம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல்ரீதியாகவும் வெற்றிப்பெற்றது. இந்த படத்தில் நடித்த சிறுவர்கள் விக்னேஷ், ரமேஷ் ஆகிய இருவருக்கும் சிறந்த குழந்தை நட்சத்திரமாக தேசிய விருது கிடைத்தது. இந்த படத்திற்கு பிறகுதான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சிறந்த நடிகையாக ரசிகர்களால் அறியப்பட்டார்.

இந்த படம் வெளியாகி இன்று 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை நினைவுக் கூர்ந்துள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், நாட்கள் எவ்வாறு நகர்கிறது என்பது தெரியவில்லை. சரியான 6 ஆண்டுகளுக்கு முன்பு ‘காக்கா முட்டை’ திரைப்படம் இந்நாளில் வெளியானது. இதயத்திற்கு நெருக்கமான இந்த படம்தான் எனது அடையாளம். பல தடைகளை தாண்டி வாழ்க்கையில் என்னை உயர்த்தி படம். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் மணிகண்டன், தயாரிப்பாளர்கள் வெற்றிமாறன் மற்றும் தனுஷ் ஆகியோருக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

BYD கார் காட்சியறை திறப்பு மட்டக்களப்பு

ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ நிறுவனத்தின் BYD கார் விற்பனை நிலையத்தின்...

காரைதீவில் பாரம்பரிய உணவுகளை அறிமுகப்படுத்தும் “மக்கள் உணவகம்” திறப்பு

காரைதீவு கல்முனை பிரதான வீதியில், காரைதீவு பிரதேச செயலகத்திற்கு எதிரில், "1967...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்