அல் கயிதா அமைப்பின் தலைவர் உயிருடன் இருக்கிறார்; ஐநா கண்காணிப்பு குழு ரிப்போர்ட்!

Date:

அல் கயிதா அமைப்பின் தலைவர் அய்மன் அல் ஜவஹிரி உயிருடன் இருப்பதாக ஐநா தகவல் வெளியிட்டுள்ளது.

அல் கயிதா அமைப்பை சேர்ந்த பலர் ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் தங்கியிருப்பதாகவும், அதில் கயிதா தலைவர் அய்மான் அல் ஜவஹிரியும் இருப்பதாக ஐநா வெளியிட்டுள்ள ரிப்போர்ட்டில் தெரியவந்துள்ளது.

ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான அல் கயிதா தீவிரவாதிகளும், இதர பயங்கரவாத சக்திகளும் தாலிபான்களுடன் சேர்ந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐநா கண்காணிப்பு குழு வெளியிட்டுள்ள 12ஆம் அறிக்கையில், ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் அல் கயிதா அமைப்பை சேர்ந்த ஏராளமானோர் இருப்பதாகவும், அப்பகுதியில் அல் கயிதா தலைவர் அய்மான் அல் ஜவஹிரியும் இருப்பதாக நம்பப்படுகிறது என தெரிவித்துள்ளது.

அல் கயிதா அமைப்பின் தலைவர் அய்மன் அல் ஜவஹிரி உடல்நலக் குறைவால் இறந்துவிட்டதாக இத்தனை நாட்களாக நம்பப்பட்டது. இந்நிலையில் அவர் உயிருடன் இருப்பதாக ஐநாவுக்கு தகவல் வந்துள்ளது. எனினும், அவர் மிகவும் பலவீனமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

யா/கோப்பாய் சரவணபவானந்தா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் பாடசாலை மைதானத்தில் நேறறு நடைபெற்றது.

நூற்றாண்டு விழாவின் பிரதான நிகழ்வாக கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட பாடசாலை பிரதான நுழைவாயில்...

களுத்துறை யில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மட்டு ஆறுமுகத்தான் குடியிருப்பைச் சேர்ந்த ஒருவர் வாழைச்சேனையில் வைத்து கைது

களுத்துறை நாகொடாவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்பட்ட ஏறாவூர் ஆறுமுகத்தான்...

இந்திய ஐரெக் பயிற்சிபெற்ற இலங்கையர்கள் அமைப்பு கொழும்பில் அங்குரார்ப்பணம் !

இந்தியா வெளிவிவகார அமைச்சின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்