பிறந்து 27 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு கொரோனா!

Date:

கோவில்பட்டி அருகே பிறந்து 27 நாட்களே ஆன பச்சிளங் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இடைச்செவல் கிராமத்தினை சேர்ந்த ஒரு தம்பதிக்கு கடந்த மாதம் 7 ந்திகதி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

சில தினங்களில் குழந்தையுடன் வீடு திரும்பியுள்ளார். இதற்கிடையில் குழந்தையின் தாத்தாவிற்கு லேசான காய்ச்சல் அறிகுறி தென் படவே அவர் கொரோனா பரிசோதனை செய்துள்ளார்.

இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதையெடுத்து வீட்டில் உள்ளவர்களுக்கு வில்லிசேரி ஆரம்ப சுகாதார நிலையம் மூலமாக கடந்த 2ந் திகதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் பிறந்து 27 நாள்களான ஆண் குழந்தைக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை. இதையெடுத்து 27 நாள் பச்சிளக்குழந்தை வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு அரசு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

ஷிராந்திக்கு பிணை!

‘சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பான விசாரணைகளுக்கு அமைய இலஞ்ச ஊழல் விசாரணை...

மட்டக்களப்பில் மனைவியின் சகோதரியை 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அத்தானுக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மனைவியின் சகோதரியான 16 வயது சிறுமி...

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிலிருந்த 11.23 ஏக்கர் காணிகள் உத்தியோகபூர்வமாக விடுவிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிலிருந்த மொத்தம் 11.23 ஏக்கர் காணிகளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்