யாழ்ப்பாணத்தில் மேலும் இரண்டு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.
கொக்குவிலை சேர்ந்த 85 வயதான முதியவர் ஒருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை கொரோனா சிகிச்சை விடுதியில் நேற்று உயிரிழந்தார்.
அளவெட்டியை சேர்ந்த 65 வயதான பெண்ணொருவர் இன்று உயிரிழந்தார்.
இதன்மூலம், யாழ் மாவட்டத்தில் பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்தது.




