மன்னாரில் இதுவரை 522 பேருக்கு தொற்று!

Date:

மன்னார் மாவட்டத்தில் மேலும் 9 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 522 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

அவர் மேலும் ஊடகங்களுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை(6) கருத்து தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் மேலும் 9 கொரோனா தொற்றாளர்கள் நேற்று சனிக்கிழமை (5) அடையாளம் காணப்பட்டுள்ளனர். தற்போது வரை 522 கொரோனா தொற்றாளர்களும்,இந்த வருடம் 505 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த மாதம் தற்போது வரை 15 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த 3 ஆம் திகதி நானாட்டான் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட 383 பீ.சி. ஆர். பரிசோதனைகளின் போது மன்னார், அரிப்பு, சாந்திபுரம், வவுனியா, யாழ்ப்பாணம் பகுதிகளைச் சேர்ந்த 6 நபர்கள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மடு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட 132 பீ.சி.ஆர்.பரிசோதனைகளின் போது 2 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் 787 பீ.சி.ஆர்.பரிசோதனைகளின் முடிவுகள் எதிர் பார்க்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அமைதியின்மை: பெண் கைதிகள் அனைவரும் இடமாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக சிறைச்சாலை கட்டடங்களுக்கு பாரிய...

அரை நிர்வாணமாக மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்

சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் ஒரு வீட்டில் பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக இரத்தினபுரி...

கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு வழங்கப்படுவது தற்காலிக அரசு பணியாக இருக்க உயர்நீதிமன்றம் நிபந்தனை

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தினருக்கு வழங்​கப்​படும் அரசுப் பணி,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்