யூடியூப் பார்த்து வீட்டில் சாராயம் காய்ச்சியவர்கள் கைது!

Date:

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் யூடியூப் பார்த்து வீட்டில் சாராயம் காய்ச்சிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

காமாட்சிபேட்டை , நத்தம் , திருவாமூர் உள்ளிட்ட பகுதிகளில் சிலர் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சுவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

சந்தேகத்தின் பேரில் அப்பகுதியைச் சேர்ந்த சில வீடுகளில் ஆய்வு செய்தபோது, கேஸ் ஸ்டவ்வில் குக்கர் வைத்து அதில் சிலிண்டர் டியூப் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி நூதன முறையில் சாராயம் காய்ச்சி வந்தது தெரியவந்தது.

சாராயம் காய்ச்சப் பயன்படுத்தப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், 5 பேரை கைது செய்தனர். விசாரணையில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால், யூடியூப் பார்த்து சாராயம் காய்ச்சி வந்தது தெரியவந்தது.

spot_imgspot_img

More like this
Related

அறிவுசார் சொத்துரிமையை மீறிய விமல் ரூ.10 இலட்சத்தை இழப்பீடாக வழங்க உத்தரவு

'இல்லை என்பதற்குப் பதிலாக உண்மை' என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டதன்...

பெண்களுக்காக யாழ் பல்கலையின் முன் விழிப்புணர்வு நடவடிக்கையில் வெளிநாட்டவர்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுழைவாயிலில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் வியாழக்கிழமை சமூக விழிப்புணர்வு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்