மனைவியை கொன்ற நாயை துப்பாக்கியால் சுட்டு கொன்ற கணவன்!

Date:

இந்தூர் சுடாமா நகரைச் சேர்ந்தவர் நரேந்திர விஷ்வையா, இவர் வசித்து வரும் பகுதிக்கு அருகே வசித்த வந்த ஒரு குடும்பத்தினர் தன் செல்லப்பிராணியாக நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளனர். இவரது மனைவியில் அவர்கள் வளர்த்து வந்த நாய் கடித்து விட்டதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த விஷ்வையா தனது துப்பாக்கியை எடுத்துக்கொண்டு அந்த நாயை சுட்டுக்கொன்றுள்ளார். இதை பார்த்த அந்த நாயின் உரிமையாளர்கள் போலீசில் புகார்அளித்தனர் போலீசார் வந்து விசாரித்த போது நாயை தான் தான் சுட்டுக்கொன்றதாக விஷ்வையா ஒப்புக்கொண்டார். அவரிடம் லைசென்ஸ் உள்ள துப்பாக்கி இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து நாயின் உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விஷ்வையாவை கைது செய்தனர். விசாரணையில் அந்த நாய் அப்பகுதியில் உள்ள பலரை கடித்துள்ளதாகவும், தற்போது தன் மனைவியை கடித்துவிட்டதால் ஆத்திரத்தில் அதை சுட்டதாக தெரிவித்தார்.

போலீசார் இது குறித்து கூறும் போது விஷ்வையா சொல்வது உண்மையாக இருந்தாலும் அந்த நாயின் உரிமையாளர்கள் மீது அவர் புகார் அளித்திருக்க வேண்டும்.நாயை கொலை செய்ய அவருக்க அதிகாரமில்லை என கூறினர்.

தன் மனைவியை நாய் கடித்ததால் ஆத்திரத்தில், அந்த நாயை கணவன் துப்பாக்கியால் சுட்டு கொன்ற அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ஷம்போ பக்கெட்டுகள்

கடல் மார்க்கமாக இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 5,386 ஷாம்போ பக்கெட்டுகள்...

வீரவன்சவின் சகோதரருக்கு விளக்கமறியல்

ஜனாதிபதி செயலகத்தால் தேசிய சுதந்திர முன்னணிக்கு வழங்கப்பட்ட 40 அரசாங்க வாகனங்களை...

வெளிநாட்டிலிருந்து வருவோரின் வீடுகளைக் குறிவைத்த திருடர்கள் சிக்கினர்

காரைநகரில் வெளிநாட்டிலிருந்து வருகை தருவோரின் வீடுகளை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட திருட்டுச் சம்பவங்களுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்