நாளை முதல் நிறங்களின் அடிப்படையில் அத்தியாவசிய சேவை ஸ்டிக்கர்

Date:

பயணக் கட்டுப்பாட்டு காலத்தில் கொழும்பு நகரத்திற்குள் நுழையும் அத்தியாவசிய சேவை வாகனங்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்டிக்கர் முறையை திருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பிற்குள் நுழையும் அனைத்து சாலைகளிலும் புதிய ஸ்டிக்கர் அமைப்பு நாளை காலை முதல் பயன்படுத்தப்படவுள்ளது. 11 நிறங்களில் துறைரீதியாக ஸ்டிக்கர் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீக்கப்படும் வரை இந்த ஸ்டிக்கர் செல்லுபடியாகும், என பொலிஸ் பேச்சாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹன கூறினார்.

அதன்படி 11 துறைகளுக்கு வெவ்வேறு வண்ணங்களின் கீழ் ஸ்டிக்கர்கள் வழங்கப்படும்.

சுகாதார சேவைகள் – பச்சை
முப்படையினர் / பொலிஸ் – நீலம்
அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் – சிவப்பு
அத்தியாவசிய சேவை விநியோகஸ்தர்கள் – மஞ்சள்
இறக்குமதி / ஏற்றுமதி – பிறவுண்
உணவு விநியோகம் – சாம்பல்
அத்தியாவசிய தனியார் துறை – ஊதா
மீடியா – ஒரேஞ்ச்
விமான பயணம் – வெள்ளை
அவசரநிலை (மருத்துவ தேவை, இறுதிச்சடங்கு) – கருப்பு

சமைத்த உணவு மற்றும் விநியோக சேவைகளிற்கு – சாம்பல்

கொழும்புக்குள் நுழையும் வாகனங்களுக்கு இந்த ஸ்டிக்கர்கள் நாளை வழங்கப்படும்.

spot_imgspot_img

More like this
Related

36 ஆண்டுகளாகத் தொடரும் நில இழப்பு – 28 ஆவது வாரமாகவும் தொடரும் மயிலிட்டி மக்களின் போராட்டம்!

மயிலிட்டி மக்களின் பூர்வீகக் காணிகளையும் வாழ்விடங்களையும் விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும்...

மயிலத்தமடு – மாதவனை விவகாரம்: நவம்பர் 2இல் மட்டக்களப்பில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்!

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் பகுதியில் நீண்டகாலமாக தொடர்ந்து இடம்பெற்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்