ஒவ்வாமைடையவர்களிற்கு வைத்தியசாலைகளில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது!

Date:

சிலவகை மருந்துகள், ஊசி மருந்துகளுக்கு ஒவ்வாமை உடையவர்கள் மற்றும் வேறு ஆபத்துக்குரிய நோய் நிலமை உடையவர்களுக்கும் அவசர சிகிச்சைப் பிரிவுகள் உள்ள வைத்தியசாலைகளுக்கு அழைத்து கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் திட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காலை 8 மணி முதல் யாழ்ப்பாண மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் யாழ் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் தாதியர்கள் இணைந்து குறித்த தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டை முன்னெடுத்தனர். மற்றும் சாவகச்சேரி, தெல்லிப்பழை, ஊர்காவற்றுறை, பருத்தித்துறை ஆகிய ஆதார வைத்தியசாலைகளில் இவ்வாறு தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.

கோவிட்-19 தடுப்பூசிகள் பெற்றுக்கொள்ள வருகை தந்தவர்கள் மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் மருந்து ஏற்றப்படுகிறது.

பெருமளவானோர் தமக்கான கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வைத்தியசாலைகளுக்கு வருகை தந்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

முச்சக்கர வண்டி போக்குவரத்து சேவையில் ஈடுபட குறைந்தபட்ச வயது 40: அரசு திட்டம்!

முச்சக்கர பயணிகள் போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக...

களுவாஞ்சிக்குடி விபத்தில் உயிரிழப்பு அதிகரிப்பு

களுவாஞ்சிகுடி - கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு...

யாழ் விபத்தில் இளைஞன் பலி

யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் இன்று நடந்த விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனிக்குளத்தில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்