12 முதல் 15 வயதுக்குட்பட்டோருக்கு பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி: இங்கிலாந்து அனுமதி!

Date:

இங்கிலாந்தில் 12 முதல் 15 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல நாடுகளில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் வேகமாக நடைபெறுகிறது. ஆனால், பெரும்பாலான நாடுகளில் குழந்தைகள் மற்றும் சிறுவர், சிறுமியருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்னும் தொடங்கவில்லை.

அமெரிக்காவில் 12 முதல் 15 வயதுடைய சிறுவர், சிறுமியரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், ஐரோப்பிய ஒன்றியமும் 12 முதல் 15 வயதுடையோர் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதித்துள்ளது.

ஆனால், பல நாடுகளில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கே தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இங்கிலாந்தில் 12 வயது முதல் 15 வயது நிரம்பிய சிறுவர், சிறுமியருக்கும் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சிறுவர், சிறுமியருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள போதும் இந்த பணிகள் எப்போது தொடங்கும் என்ற தகவல் வெளியாகவில்லை. 12 வயது முதல் 15 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும் திகதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

யாழில் பட்டாசு வெடித்து இளைஞன் பலி

யாழ்ப்பாணம் குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் இன்று (02) அதிகாலை...

இளைஞர் உயிரிழப்பு பட்டாசு வெடித்து

பட்டாசு வெடித்து இளைஞர் உயிரிழப்பு – யாழ்ப்பாணத்தில் துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் குருநகர்...

யாழில் 18 வயதான இரட்டை சகோதரிகள் தீமூட்டி உயிர்மாய்த்தனர்!

யாழ்ப்பாணம், ஏழாலை பகுதியில் தமக்கு தாமே தீமூட்டி 18 வயதான இரட்டை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்