விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் பாட்டு கேட்டுக் கொண்டே கார் ஓட்டும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. அந்த வீடியோவை ஜேசன் சஞ்சய் பெயரில் இருக்கும் போலி ட்விட்டர் கணக்கிலும் வெளியிட்டுள்ளனர்.
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் கனடாவில் இருக்கும் திரைப்பட கல்லூரியில் படித்து வந்தார். அவருக்கு அப்பாவை போன்று கேமராவுக்கு முன்னால் இருக்க விருப்பம் இல்லையாம். தாத்தா எஸ்.ஏ. சந்திரசேகரை போன்று கேமராவுக்கு பின்னால் இருக்க விரும்புகிறாராம்.
ஜேசன் இயக்குநராக விரும்பினாலும், அவரை ஹீரோவாக பார்க்கவே விஜய் ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள். ஜேசன் இயக்கி, நடித்த குறும்படங்கள் முன்பு வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன. இந்நிலையில் ஜேசன் கார் ஓட்டும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகியுள்ளது.
ஜேசன் சஞ்சய் பெயரில் ட்விட்டரில் ஒரு கணக்கு இருக்கிறது. அது போலி கணக்கு என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த கணக்கில் என் வீடியோ என்று கூறி அந்த கார் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
My videos are out 😍#SanjayVijay #ThalapathyVijay pic.twitter.com/hBn6SUgUld
— Sanjay Vijay (@IamJasonSanjay) June 2, 2021
அந்த வீடியோவை பார்த்த விஜய் ரசிகர்களோ,
அப்பா எப்படி இருக்கிறார்?. கார் ஓட்டும் போது கவனமாக இருங்க தம்பி. எப்பொழுது ஹீரோவாகப் போகிறீர்கள் என்று கேட்டுள்ளனர். ஜேசனுக்கு தன் அப்பாவை வைத்து படம் இயக்கும் ஆசை இருக்கிறதாம். ஆனால் அதற்கு முன்பு பிற இயக்குநர்களிடம் உதவியாளராக இருந்து அனுபவம் பெற்ற பிறகு விஜய்யை வைத்து படம் எடுப்பாராம்.
இதற்கிடையே உப்பேனா தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜேசன் சஞ்சயை நடிக்க வைக்க விஜய் சேதுபதி விரும்பியதாக முன்பு தகவல் வெளியானது. இது குறித்து விஜய் சேதுபதி விஜய்யிடம் கூற அவரும் சரி என்று சொன்னாராம். ஆனால் உப்பேனா ரீமேக் பற்றி அதன் பிறகு எந்த தகவலும் வெளியாகவில்லை.
அப்படி உப்பேனா ரீமேக்கில் ஜேசன் சஞ்சய் நடித்தால் அவருக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பம். உப்பேனா படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்தவர் க்ரித்தி ஷெட்டி என்பது குறிப்பிடத்தக்கது.