Pagetamil
உலகம்

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் நிபந்தனைகளுடன் அனுமதி; புதிய தளர்வுகளை அறிவித்த பிரான்ஸ் அரசு!

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸில் கொரோனா பாதிப்புகள் கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை நிலவரப்படி மொத்த பாதிப்புகள் 5,701,029ஆக காணப்படுகிறது. குணமடைந்த நபர்களின் எண்ணிக்கை 5,392,959ஆக உள்ளது. தற்போது 1,98,154 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். பிரான்ஸ் நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருகின்றன.

இதையொட்டி தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. படிப்படியாக அதிகரிக்க தொடங்கிய நோய்த்தொற்று நவம்பர் 7ஆம் தேதி புதிய உச்சமாக 86,852 பேருக்கு கண்டறியப்பட்டது. பின்னர் குறையத் தொடங்கி ஜனவரி 2ஆம் தேதி குறைந்தபட்சமாக 3,466 பேருக்கு மட்டும் வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அடுத்த அலை உருவான நிலையில் பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கி ஏப்ரல் 14ல் உச்சம் தொட்டது.

அதிலிருந்து கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகின்றது. நேற்றைய தினம் புதிதாக 6,953 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. எனவே பிரான்ஸின் சூழல் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதால் கட்டுப்பாடுகளை தளர்த்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சுற்றுலா துறையை ஊக்குவிக்கும் வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று அதிகமுள்ள இந்தியா, தென் ஆப்ரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதேசமயம் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் உலகின் பிற நாடுகளில் இருந்து தடுப்பூசி போட்டுக் கொண்ட சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. இவர்கள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள்.

சமீபத்தில் எடுக்கப்பட்ட கோவிட் பரிசோதனையின் நெகடிவ் சான்று இருந்தால் மட்டும் போதும். மேலும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் தடுப்பூசி போட்டுக் கொண்ட சுற்றுலா பயணிகள் எந்தவொரு பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நேபாளத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த இந்தியர்

east tamil

அமேசோன் நிறுவன 1,700 ஊழியர்கள் பணிநீக்கம்

east tamil

பிரித்தானிய கடல் எல்லைக்குள் நுழைந்த 2வது ரஷ்ய கப்பல்

east tamil

மியன்மாரில் நிலநடுக்கம்

east tamil

உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகும் திகதி அறிவிப்பு

east tamil

Leave a Comment