29.3 C
Jaffna
March 5, 2025
Pagetamil
சினிமா சின்னத்திரை

வெப் சீரிஸ் பக்கம் திரும்பிய ஓவியா!

ஓவியா தற்போது மெர்லின் என்ற வெப் சீரிஸில் நடித்து இருக்கிறார். அது இன்று ஜூன் 5ம் திகதி வெளியாக உள்ளது.

ஓவியா தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடித்து பெற்ற புகழை விட பிக் பாஸ் ஷோவில் பங்கேற்றபோது தான் அதிகம் ரசிகர்களை பெற்றார். அவர் வெளிப்படையாக பேசுவது ரசிகர்களுக்கு பிடித்துப்போக அவருக்கு ஆர்மி, நேவி என ஆரம்பித்து அவருக்கு ஆதரவு தெரிவித்தார்கள்.

இவ்வளவு ரசிகர்களை பெற்ற ஓவியா பிக் பாஸில் இருந்து வெளியில் வந்த பிறகு சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார், டாப் ஹீரோ படங்களிலும் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. ஓவியா நடித்த 90ml என்று அடல்ட் படம் வெளியாகி அவரது மார்க்கெட்டை தள்ளாட வைத்துவிட்டது. ஓவியா அதற்கு பிறகு ஓவியா எந்த படங்களிலும் நடிக்கவில்லை.

இந்நிலையில் தற்போது ஓவியா ஒரு வெப் சீரிஸில் நடித்து இருப்பதாக ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். மெர்லின் என பெயரிடப்பட்டு உள்ள அந்த வெப் சீரிஸ் இன்று ஜூன் 5ம் திகதி youtubeல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த வெப் சீரிஸுக்காக தான் தற்போது ஓவியா ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பிரபல பாடகி கல்பனா தற்கொலை முயற்சி: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

Pagetamil

ஒஸ்கர் 2025: விருதுகளைக் குவித்த ட்யூன் 2, அனோரா, தி ப்ரூட்டலிஸ்ட்

Pagetamil

விஜய் சாதனையை முறியடித்த அஜித்!

Pagetamil

‘டிராகன்’ 3 நாள் வசூல் ரூ.50 கோடி – அதிகாரபூர்வ அறிவிப்பு

Pagetamil

திவ்யபாரதி உடன் டேட்டிங்கா? – ஜி.வி.பிரகாஷ் மறுப்பு

Pagetamil

Leave a Comment