விமான பணிப்பெண்ணின் முகத்தில் குத்தி, பல்லை உடைத்த பயணி: வைரல் வீடியோ!

Date:

விமானம் தரையிறங்கும் போது சீட் பெல்ட் அணிய சொல்லியதால் விமான பணிப்பெண்ணின் முகத்தில் குத்தி பல்லை உடைத்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாஷிங்டனில் தென்மேற்கு ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று சாக்ரமெண்டோவிலிருந்து சான்டியாகோ சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றுள்ளது. அப்பொழுத விமானம் தரை இறங்க தயாராகும் போது விமான பணிப்பெண்பயணிகளிடம் விமானம் தரையிறங்குவதற்கு தயாராக உள்ளதால் பயணிகள் தங்கள் சீட் பெல்ட்டை அணிந்து கொள்ளுமாறு கூறியுள்ளார். அப்பொழுது விமானத்தில் இருந்து 28 வயது உடைய பெண் பயணி ஒருவர் பெண் விமான பணிப்பெண்ணின் முகத்தில் ஓங்கி குத்தியுள்ளார்.

தடுக்க முயன்ற மற்ற பெண்களையும் அந்த பெண் மிரட்டியதால், அனைவரும் அமைதியாக இருந்துள்ளனர். இருப்பினும் அருகில் இருந்த ஒரு பயணி இந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளார். மேலும் இந்த சம்பவத்தில் விமான பணிப்பெண்ணின் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அந்தப் பெண் தனது இரண்டு பற்களை இழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியதை அடுத்து பலரும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த விமானம் சாண்டியாகோ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதும் விமானப் பணிப்பெண்ணை தாக்கிய பெண்மணியை போலீசார் விமானத்தில் இருந்து வெளியேற்றி கைது செய்துள்ளனர்.

https://twitter.com/i/status/1398006148951838722

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட மூலத்தை எதிர்த்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில்  பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தை தேசிய மக்கள் சக்தி...

ஒரே கிளிக்கில் பரீட்சைத் தரவுகள்: தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய டிஜிட்டல் முயற்சி

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தின் (CEDPL)...

தமிழ் தேசம் ஜோதிலிங்கம் ஐயாவை இழந்துவிட்டது: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆழ்ந்த இரங்கல்

ஆசிரியர், வழக்கறிஞர், அரசியல் ஆய்வாளர் என்ற எல்லைகளைத் தாண்டித் தமிழ் தேசத்தின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்