நடிகை ரிச்சா கங்கோபாத்யாய் -க்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
நடிகை ரிச்சா கங்கோபாத்யாய் சில மாதங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்திருந்தார். கர்ப்பமாகி 7 மாதங்கள் வரை யாருக்கும் தெரிவிக்காமல் ரகசியமாக வைத்திருந்தார். அதையடுத்து தங்களுக்கு குழந்தை பிறக்கப்போவதை மிகவும் மகிழ்ச்சியுடன் கடந்த பிப்ரவரி மாதம் வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் ரிச்சா- ஜோ லங்கலா ஜோடிக்கு கடந்த மே 27-ம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. “அவன் ஆரோக்கியமாக இருக்கிறார். பார்ப்பதற்கு அப்பாவைப் போலவே இருக்கிறான். நீ எங்கள் வாழ்க்கையை விவரிக்க முடியாத மகிழ்ச்சியால் நிரப்பிவிட்டாய்.” என்று ரிச்சா தெரிவித்துள்ளார்.
நடிகை ரிச்சா செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘மயக்கம் என்ன’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் சிம்பு நடிப்பில் வெளியான ‘ஒஸ்தி’ படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். பின்னர் நடிப்பை கைவிட்டு வெளிநாடு சென்று படிக்க ஆரம்பித்தார்.
அதையடுத்து, ரிச்சா 2019-ம் ஆண்டு தனது காதலர் ஜோ லங்கலா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணம் இந்து மற்றும் கிறிஸ்துவம் என இருமுறைகளிலும் நடைபெற்றது. தற்போது இந்தத் தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ளதை அடுத்து பலர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.