24.8 C
Jaffna
December 17, 2024
Pagetamil
சினிமா

கொரோனாவால் தள்ளிப்போனது சமுத்திரக்கனி கதாநாயகனாக நடித்துள்ள படம்!

இயக்குனர் அஸ்வின் கங்கராஜு ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘நான் ஈ’ படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றினார். பாஹுபலி படங்களிலும் அவர் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.

தற்போது இயக்குனராகத் தனது முதல் படத்தைத் துவங்கியுள்ளார். அந்தப் படத்தில் சமுத்திரகனி கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு காலா பைரவா என்பவர் இசையமைத்துள்ளார். இந்தப் படத்திற்கு ஆகாசவாணி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த படம் (ஜூன் 4) நேற்றே வெளியாக இருப்பதாகப் படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால் கொரோனா பரவல் காரணமாக படம் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது படத்தின் ரிலீஸ் குறித்து அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

“உலகம் சாதாரணமாக இருந்திருந்தால் நாங்கள் இன்று ஆகாஷவானியைச் சந்தித்து கொண்டாடியிருப்போம். இருப்பினும், நாம் சோதனையான காலகட்டத்தில் இருக்கிறோம்.

மேலும் வீட்டிலேயே இருக்க வேண்டியது அவசியம். எனவே உலகம் அனைவருக்கும் பாதுகாப்பானதாக மாறிய உடன் உங்களைச் சந்திக்க அக்ஷவானி வருவார்! வெளியீட்டைப் பற்றிய அறிவிப்பை விரைவில் உங்களுக்கு வழங்குவோம். எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களுக்காக நாங்கள் உருவாக்கியவை சரியான வழியில், சரியான நேரத்தில் அனுபவிக்கப்பட வேண்டியவை. “என்று தெரிவித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘சிவகார்த்திகேயன் 25’இல் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா

Pagetamil

“கடந்த ஆண்டே எனக்கு திருமணம் ஆகிவிட்டது” – நடிகை டாப்ஸி

Pagetamil

‘ரஹ்மான் எனக்கு தந்தையைப் போன்றவர்’ – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மோஹினி தே

Pagetamil

‘புஷ்பா 2’ வில் இடம்பெற்றுள்ள ‘கிஸ்ஸிக்’ பாடல் நவ.24 இல் வெளியீடு

Pagetamil

ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பிரிவுக்கும் மோஹினி தேவுக்கும் தொடர்பா?: வழக்கறிஞர் விளக்கம்

Pagetamil

Leave a Comment