தேராவில் விதைப்பண்ணையில் உளுந்து திருட்டு!

Date:

முல்லைத்தீவு தேராவில் பகுதியில் அமைந்துள்ள மாதிரி விவசாய பண்ணையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த விதை உளுந்து களவாடப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் பணிமனையின் கீழ் உள்ள தேராவில் மாதிரி விதை உற்பத்தி பண்ணையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த விதை உளுந்து காணாமல் போயிருந்தாக புதுக்குடியிருப்பு போலீஸ் நிலையத்தில் மாதிரி விதை உற்பத்தி பண்ணையின் முகாமையாளரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து குறித்த தினத்தில் கடமையிலிருந்த காவலாளிகள் இருவரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டதையடுத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டது குறித்த இரண்டு பேரும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மாதிரி விதை உற்பத்தி பண்ணையில் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ள அதேவேளை தானியங்களும் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த போதும் குறித்த விதை உற்பத்தி பண்ணைக்கு மின்விளக்குகள் பொருத்தப்படாமை பாதுகாப்பற்ற களஞ்சிய வசதி என பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு குறித்த விதை உற்பத்தி பண்ணையில் அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மை காரணமாகவே குறித்த களவு இடம் பெற்றிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இலங்கையின் முன்னணி பதிப்பாளர் கொடகே காலமானார்

கோடகே பதிப்பகத்தின் நிறுவனர் தேசபந்து சிறிசுமன கொடகே நேற்று (29) காலமானார். அவர்...

எரான் விக்ரமரட்னவை கட்சியிலிருந்து விலகக்கோருகிறது ஐக்கிய மக்கள் சக்தி!

இலங்கை கிரிக்கெட்டின் உருமாற்றக் குழுவின் தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள்...

கடன் பணம் மாயம்: பாராளுமன்றத்தில் விளக்கமளிக்கவுள்ள ஜனாதிபதி

வியாழக்கிழமையன்று பொது நிதிக் குழுவின் (COPF) முன் ஆஜராகத் தன்னால் இயலாது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்