களு கங்கையின் தாழ்நில பகுதிகளான ஹொரனை, அகலவத்தை, இங்கிரிய, பாலிந்தனுவர, புலத்சின்ஹல, தொடங்கொட, மில்லனிய, மதுரவெல மற்றும் களுத்துறை பிரதேச செயலக பகுதிகளில் வசிக்கும் மக்கள் எசசரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்த பகுதிகளில் சிறியளவில் வெள்ளப் பெருக்கு ஏற்படுமென நீர்ப்பாசனத் துறை எச்சரித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் வெள்ளம் பரவக்கூடும் என்று திணைக்களம் எச்சரித்தது.
களு கங்கையின் மத்திய மற்றும் தாழ்வான பகுதிகளில் நேற்று 175 மி.மீ க்கும் அதிகமான மழை பெய்தது.
எஹெலியகொடவில் கடந்த 24 மணி நேரத்தில் 247 மிமீ அதிக மழை பெய்தமை குறிப்பிடத்தக்கது.