உலகில் உள்ள அனைத்து நாடுகளில் தலைநகரங்களையும் சொல்லும் சிறுமி! (வீடியோ)

Date:

2.5 வயது சிறுமி ஒருவர் உலகில் உள்ள அனைத்து நாடுகளில் தலை நகரங்களையும் சொல்லும் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.

சட்டீஸ்கர் மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருபவர் பிரியங்கா சுக்லா, இவர் தன்னுடன் பணியாற்றும் பிரதீப் தான்தன் என்பவரது 2.5 வயது மகளை சந்தித்துள்ளார். அவரிடம் பேசும் போது தான் உலகில் உள்ள எல்லா நாட்டின் தலை நகரங்களையும் மனப்பாடம் செய்து வைத்துள்ளேன் என அந்த சிறுமி கூறியுள்ளார். இதை கேட்டு அச்சரியமடைந்த பிரியங்கா அதை சோதித்து பார்க்க சில கேள்விகளை கேட்டார். அப்பொழுது அதை தனது செல்போனில் வீடியோ எடுத்தார்.

அந்த வீடியோவில் அவர் அந்த குழந்தையின் பெயர் வயதை கேட்டுவிட்டு பின்பு சில நாடுகளின் பெயரை குறிப்பிடுகிறார். அதற்கு அந்த சிறுமி அந்தந்த நாட்டின் தலை நகரங்களின் பெயரை கூறுகிறார். அந்த சிறுமிக்கு உலகில் உள்ள 205 நாடுகளின் தலை நகரங்களின் பெயரும் மனப்பாடமாக தெரிகிறது. இதை எல்லாம் கேட்கும் போது நமக்கே ஆச்சரியமாக இருக்கிறது.

2.5 வயதில் எப்படிய இவ்வளவு பெயர்களை மனப்பாடமாக அந்த சிறுமி வைத்திருக்கிறார் என பலர் இந்த சிறுமியையும்,பெற்றோரையும் பாராட்டினர். பலர்இந்த வீடியோவை சமூகவலைத்தளங்களில் சேர் செய்ய துவங்கினர். இந்த செய்தியை நாங்கள் தயார் செய்யும் போது இந்த வீடியோவை 26 ஆயிரம் பேர் பார்த்திருந்தனர். 2 ஆயிரம் பேர் லைக் செய்திருந்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இலங்கையின் முன்னணி பதிப்பாளர் கொடகே காலமானார்

கோடகே பதிப்பகத்தின் நிறுவனர் தேசபந்து சிறிசுமன கொடகே நேற்று (29) காலமானார். அவர்...

எரான் விக்ரமரட்னவை கட்சியிலிருந்து விலகக்கோருகிறது ஐக்கிய மக்கள் சக்தி!

இலங்கை கிரிக்கெட்டின் உருமாற்றக் குழுவின் தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள்...

கடன் பணம் மாயம்: பாராளுமன்றத்தில் விளக்கமளிக்கவுள்ள ஜனாதிபதி

வியாழக்கிழமையன்று பொது நிதிக் குழுவின் (COPF) முன் ஆஜராகத் தன்னால் இயலாது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்