29.5 C
Jaffna
March 28, 2024
லைவ் ஸ்டைல்

இளமையோடு ஆரோக்கியத்தையும் அள்ளித்தரும் நெல்லிக்காய் ஜூஸ் பலன்கள்!

நெல்லி யுபோர்பியேசி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரம். இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும்.

எலுமிச்சையைத் (Lemon) தொடர்ந்து ராஜ கனி என்று அழைக்கப்படும் இந்த நெல்லிக்கனியின் (Amla) பங்கு அளப்பரியது. ஆயுளை வளர்க்கும் கனி என்று அழைக்கப்படும் சிறப்பு நெல்லிக்கனிக்கு மட்டுமே உரியது. சமைத்தாலும் வேக வைத்தாலும் காயவைத்தாலும் வெட்டி நறுக்கினாலும் மொத்த பயனையும் வீணாக்காமல் தரும் சத்து மிகுந்த கனி இந்த நெல்லிக்கனி. ஆயிர்வேதம் மற்றும் யுனானி மருத்துவங் களில் பெருமளவு நெல்லியைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்னென்ன பலன்கள் உண்டாகிறது என்பதை பார்போம்.

* நெல்லியில் இருக்கும் குரோமியம் சத்துகள் இதயம் சம்பந்தமான பாதிப்புகளை வராமல் தடுக்கிறது. இதய தசைகளை வலுவாக்குகிறது. இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. இதய வால்வுகளில் இரத்தக்குழாய்க ளில் ஏற்படும் அடைப்புகளை சீராக வைக்கிறது. மாரடைப்பு வருவதை தடுக்கிறது. இதயத்துக்கு வலு கொடுக்கிறது.

* நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி உடலில் தேங்கியிருக்கும் அதிகப்படியான கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்றுகிறது. உடலில் இருக்கும் புரதச்சத்தை அதிகரித்து உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

* ரத்தத்தில் இருக்கும் நச்சுத்தன்மையை நீக்கி ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும். சிறுநீரகங்கள் ரத்தத்தில் இருக்கும் கழிவுகளை வடிகட்டி வெளியேற்றும் வேலையைச் செய்கிறது. சிறுநீரகம் வெளியேறுவதில் பிரச்சனை இருப்பவர்களுக்கு சிறந்த சிறுநீர் பெருக்கியாக நெல்லிச்சாறு செயல்படுகிறது.

* உணவு செரிமானமாகவும் அதிலிருந்து பெறப்படும் ஊட்டச்சத்தை உடலுக்கு எடுத்துச்செல்வதிலும் பித்தநீர் செயல்படுகிறது. இந்த பித்தப்பை ஆரோக்கியமாக இருந்தால் பித்தப்பை கற்களை கரைக்கலாம். மேலும் பித்தப்பையில் கற்கள் உருவாகாமல் தடுக்கும்.

* நெல்லிச்சாறுடன் தேன் கலந்து அல்லதுதேன் கலந்த நெல்லியை தினமும் சாப்பிட்டு வந்தால் குறிப்பிட்ட மாதத்தில் ஹீமோகுளொபின் அளவு அதிகரிப்பதை பரிசோதனையில் உறுதி செய்துகொள்ளலாம்.

நெல்லிக்காய் ஜூஸ் செய்யும் முறை

இஞ்சியை கழுவி தோல் நீக்கி எடுத்து வைத்து கொள்ளுங்கள். பின்னர் நெல்லிக்காயை நன்கு கழுவி கொட்டையை நீக்கி விட்டு பொடியாக வெட்டி வைத்து கொள்ளுங்கள். மிக்ஸியில் நெல்லிக்காயை போட்டு கூடவே இஞ்சி, 2 கப் தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும். உங்கள் தேவைக்கேற்ப தண்ணீரை அதிகம் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளலாம். அரைத்த ஜூஸை வடிகட்டி அதில், தேன், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடித்து வரவும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வரும் காதலர் தினத்தில் உங்கள் காதலை முன்மொழிய வெற்றிகரமான சூத்திரம் இதுதான்!

Pagetamil

கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் கழுவக்கூடாதா?

Pagetamil

பருவமடைந்த, பிரசவித்த பெண்களுக்கான பிரத்யேக உணவுகள்!

Pagetamil

கணவாய் வறுவல்

Pagetamil

வெங்காயத் தாளில் 10 விதமான ரெசிப்பி!

Pagetamil

Leave a Comment