இலங்கை

முல்லைத்தீவிலும் வைத்தியசாலை ஊழியர்கள் அடையாள பணி பகிஸ்கரிப்பு!

நாடளாவிய ரீதியில் வைத்தியசாலை ஊழியர்கள் இன்று முன்னெடுத்துள்ள அடையாள பணி பகிஸ்கரிப்பினை முன்னிட்டு முல்லைத்தீவில் வைத்தியசாலைகளில் தாதிய உத்தியோகத்தர்கள் சிற்றூழியர்கள் அடையாள பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை ஊழியர்கள் இன்று நண்பகல் 12 மணிமுதல் அரை மணித்தியாலம் வைத்தியசாலை முன்பாக அடையாள பணி ஈடுபட்டிருந்தனர்.

அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த அடையாள பணி பகிஸ்கரிப்பை மேற்கொண்டுள்ளதாகவும் தமது கோரிக்கைகள் உரியவகையில் அரசினால் தீர்த்து வைக்கப்படாவிட்டால் தொடர் போராடடத்தில் ஈடுபட நேரிடும் என தெரிவித்துள்ளனர்.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தின் உடைய முல்லைத்தீவு உண்ணாப்புலவு வைத்தியசாலை மல்லாவி வைத்தியசாலை புதுக்குடியிருப்பு வைத்தியசாலை உள்ளிட்ட பல்வேறு வைத்தியசாலைகளிலும் குறித்த கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

கொடிகாமம் சந்தை வியாபாரிகள் 17 பேருக்கு தொற்று!

Pagetamil

பயணப்பையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் இன்று பிரேதப் பரிசோதனை!

Pagetamil

தலைமன்னார் புகையிரத விபத்து ஏன் நடந்தது?: கடவை காப்பாளர்கள் சொல்லும் துயரக்கதை!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!