யாழில் 12,000 குடும்பங்களிற்கு இன்று 5,000 ரூபா கொடுப்பனவு!

Date:

யாழ் மாவட்டத்தில் இன்று 12 ஆயிரம் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுளளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.

நாடு பூராகவும் அரசினால் நிதி கொடுப்பனவு வழங்கப்பட்டு வரும் நிலையில் யாழ் மாவட்டத்தில் 15 பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 12,000 குடும்பங்களுக்கு இன்று காலையில் இருந்து வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த க.மகேசன், தொடர்ச்சியாக ஏனைய குடும்பங்களுக்கும் குறித்த நிதி வழங்கி வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் சமுர்த்திபெறும் சுமார் 75,000 குடும்பங்களுக்கும் அத்தோடு வருமானம் குறைந்த 38,000 குடும்பங்கள் உட்பட மொத்தமாக 152,000 குடும்பங்களுக்கு குறித்த 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக க.மகேசன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

பிரதியமைச்சர் எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண எம்.பிக்கு பிடியாணை

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்...

தன்னைத்தானே சுட்டு உயிர்மாய்த்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன உயிரிழந்தார் துப்பாக்கிச் சூட்டு காயத்துடன்...

13வது வாரமாகவும் தொடரும் வலி. வடக்கு காணி மீட்புப் போராட்டம்

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்