வேல்ஸ் நாடாளுமன்ற தொகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (23/04/2021) அன்று தொடங்கிய விடுதலைப்புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிரான மக்கள் விழிப்பூட்டல் நடைப்பயணம் ” WALK FOR LIFT THE BAN” கடந்த புதன்கிழமை (28/04/2021) அன்று இறுதி நாள் பிரித்தானிய பிரதமர் அலுவலகத்தை சென்றடைந்தது.
இந்த விழிப்புணர்வு போராடடத்தை பிரித்தானிய நாடுகடந்த தமிழ் ஈழ அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடை என்பது நாடாளுமன்றத்தின் ஊடாகவே கொண்டு வரப்பட்டிருந்த நிலையில், அத்தடையினை நாடாளுமன்றத்தின் ஊடாக நீக்கக் கோரும் அழுத்தம் நாடாளுமன்ற உறுப்பினர்களை நோக்கி அதிகரிக்கத் தொடக்கி உள்ளது.
இந்நிலையில் பிரித்தானிய வாழ் தமிழர்கள் தாம் வசிக்கின்ற தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்தத்தினை www.lifttheban.uk இந்த இணையவழி மூலமாக முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நடை பயணத்திட்கு பொது மக்கள் தாமாகவே முன்வந்து ஆதரவு தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதில் நாடுகடந்த தமிழ் ஈழ அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர் சொக்கலிங்கம் யோகலிங்கம் மற்றும் நீதிராஜா மற்றும் பார்த்தீபன் நாடுகடந்த தமிழ் ஈழ அரசாங்க உறுப்பினர்களும் முன்னாள் போராளிகளுமாகிய கமலகீசன், கோகிலன் ஆகியோருடன் மற்றும் ஏனைய உறுப்பினர்களும் பொது மக்களுமென பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாத தடைப்பட்டியலில் விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் வைத்திருக்கும் பிரித்தானிய உள்துறையமைச்சரின் செயல் சட்டமுறைமைக்கு முரணானது என ஆணையம் தனது முதல் தீர்ப்பில் (ஒக்ரோபர் 21-2020) முன்னராக தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.




