Maggi ஆரோக்கியமான உணவு இல்லை என உலகப்புகழ் பெற்ற உணவு தயாரிப்பு நிறுவனமான நெஸ்லே கூறியுள்ளது.
சர்ச்சையில் சிக்குவது Maggiக்கு ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே பல சர்ச்சைகளை கடந்து வந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் உணவு பொருட்களில் ஒன்றான மேகி ஆரோக்கியமானது அல்ல என நெஸ்லே ஒப்புக்கொண்டுள்ளது.
தனது தயாரிப்புகளில் ஊட்டச்சத்து மதிப்பை ஆய்வு செய்து வருவதாகவும், உத்திகள் மாற்றப்படும் என்றும் கூறுகிறது. உடல்நிலை தொடர்பான விஷயம் என்பதால் தயாரிப்பை சுவையாகவும் ஆரோக்யமாகவும் மாற்ற முயற்சி மேற்கொள்ளப்படுவதாக நெஸ்லே கூறியுள்ளது.
உலகம் முழுவதும் பிரபலமான நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸ் 2 நிமிடத்தில் ரெடியாகும் என விளம்பரத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் விரும்பி சாப்பிடுவர்.
நெஸ்லே உணவு மற்றும் பானங்கள் தயாரிப்புகளில் 37 சதவீதம் 3.5 மதிப்பீட்டை கொண்டுள்ளதாக பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகை கூறுகிறது. நிறுவனத்தின் உள் அறிக்கையின்படி, 60 சதவீத உணவுப்பொருட்கள் ஆரோக்கியமானவை என்ற பட்டியலில் வரவில்லை.
இதனால் தனது உணவு தொடர்பான இலாகாகளை மாற்றுவது குறித்து நெஸ்லே ஆலோசித்து வருவதாகவும், மக்களின் ஆரோக்கியத்தை மனதில் கொண்டு அவர்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் சீரான உணவு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.