இலங்கை

8,000 கொரோனா நோயாளிகள் எங்கே?

8,000 கொரோனா வைரஸ் நோயாளிகள் சிகிச்சை மையங்களுக்கு அனுப்பப்படவில்லை> அவர்கள் சமூகத்தில் கலந்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திகுழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே இதனை தெரிவித்தார்.

இது ஒரு முக்கியமான சூழ்நிலை, இது உடனடியாக கவனிக்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது தொற்றிற்குள்ளான நிலையில் 33,000 க்கும் மேற்பட்டவர்கள் உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அரச மருத்துவ மையங்களில் 17,502 பேர்  சிகிச்சை பெற்று வருகின்றனர். தனியார் மற்றும் பாதுகாப்பு படையினரின் மருத்துவ நிலையங்களில் 6,800 பேர் சிகிசசை பெறுகின்றனர்.

நாடு முழுவதும் தொற்றிற்குள்ளானவர்களின் புள்ளி விபரமும், சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையையும் ஒப்பிடும்போது 8,000 நோயாளிகள் தற்போது எங்கேயிருக்கிறார்கள் என்ற கேள்வியெழுவதாக தெரிவித்துள்ளார்.

மருத்துவமனை படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் முயற்சித்த போதிலும், மருத்துவ வளங்கள் குறைவாக இருப்பதால் தற்போதைய நிலைமையைக் கட்டுப்படுத்த இது உதவாது, நோயாளிகளை மருத்துவ மையங்களில் சேர்ப்பதற்கான நடைமுறை முறையாக செய்யப்பட வேண்டும் என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

கிளிநொச்சியில் தொடர்ந்தும் விதி முறைகளை மீறிய கிரவல் அகழ்வு

Pagetamil

சர்வதேச நீதிமன்ற தீர்ப்பை பிரித்தானியா ஏற்கவில்லை: எம்மையும் கட்டுப்படுத்தாது!

Pagetamil

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் 474 பேருக்கு கொரோனா!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!