25.9 C
Jaffna
December 16, 2024
Pagetamil
லைவ் ஸ்டைல்

வீட்டிலேயே சூப்பரான பட்டர் பிஸ்கட் செய்வது எப்படி!

உணவு பொருட்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பப்படுவது பிஸ்கட். வீட்டில் மைக்ரோவேவ் அவன் இல்லாதவர்கள் இந்த முறையில் பிஸ்கட் செய்யலாம்.

தேவையான பொருட்கள் :

மைதா மாவு – 200 கிராம்,

வெண்ணெய் – 100 கிராம்,
சர்க்கரை – 75 கிராம்,
உப்பு, பேக்கிங் பவுடர் –  கால் டீஸ்பூன்.

செய்முறை:

மைதா மாவு, உப்பு, பேக்கிங் பவுடர் மூன்றையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.

வெண்ணெய், சர்க்கரை இரண்டையும் கலந்து மிருதுவாகும் வரை குழைக்கவும்.

சர்க்கரை நன்றாக கரைந்தவுடன் இதனுடன் மைதா, பேக்கிங் பவுடர் கலவையை சேர்த்துக் கலந்து பிசையவும்.

இந்த மாவை சப்பாத்தி கல்லில் வைத்து வட்டமாக தட்டவும். இதனை பாட்டில் மூடி அல்லது பிஸ்கட் அச்சினால் கால் அங்குல பருமன் அளவுக்கு வட்டமாக வெட்டவும். வெட்டிய துண்டுகளை ‘போர்க்’ (முள்கரண்டி) கொண்டு லேசாக குத்திவிடவும்.

ஒரு தட்டில் நெய் தடவி, மேலே மைதா மாவு தூவி, செய்து வைத்த துண்டுகளை இடைவெளிவிட்டு அடுக்கவும். அடிகனமான வாணலியில் மணலை சூடுபடுத்தி, அதன் மேல் தட்டை வைத்து, இட்லி பானை மூடியால் அழுத்தி மூடவும் (அடுப்பை சிறு தீயில் வைக்கவும்). 20 நிடத்துக்குப் பிறகு, வாசனை வர ஆரம்பித்ததும் அடுப்பை அணைக்கவும். சிறிது நேரத்துக்குப் பிறகு பிஸ்கட்டுகளை வெளியே எடுக்கவும்.

சூப்பரான பட்டர் பிஸ்கட் ரெடி.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வரும் காதலர் தினத்தில் உங்கள் காதலை முன்மொழிய வெற்றிகரமான சூத்திரம் இதுதான்!

Pagetamil

கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் கழுவக்கூடாதா?

Pagetamil

பருவமடைந்த, பிரசவித்த பெண்களுக்கான பிரத்யேக உணவுகள்!

Pagetamil

கணவாய் வறுவல்

Pagetamil

வெங்காயத் தாளில் 10 விதமான ரெசிப்பி!

Pagetamil

Leave a Comment