‘ஓல்டு’ படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
பிரெட்ரிக் பீட்டர்ஸ் மற்றும் பியரி ஆஸ்கர் லெவி இணைந்து எழுதிய சாண்ட்கேஸ்டில் மர்ம நாவலை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘ஓல்டு’. தி சிக்ஸ்த் சென்ஸ், சைன்ஸ், தி லாஸ்ட் ஏர்பெண்டர், ஆஃப்டர் எர்த், கிளாஸ் உள்ளிட்ட திரில்லர் படங்களை இயக்கிய நைட் ஷியாமலன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
கோடை விடுமுறையை ஜாலியாக கழிக்க மர்ம தீவுக்கு செல்கின்றனர் ஒரு குடும்பத்தினர். அப்போது ஒரே நாளில் குழந்தைகள் எல்லாம் இளைஞர்களாகவும், இளைஞர்கள் முதியவர்களாகவும் உருமாறுகின்றனர். இதனால் அந்த குடும்பமே திகில் அடைகிறது. கடைசியில் என்ன நடக்கிறது என்பதை த்ரில்லராக காட்டியுள்ளார் இயக்குனர்.
இந்த படத்தின் டிரெய்லர் கடந்த மே 27ம் திகதி வெளியாகி உலகளவில் டிரெண்டாகி வருகிறது. இதுவரை 7 மில்லியன் பார்வையாளர்கள் இந்த டிரெய்லரை பார்த்து ரசித்துள்ளனர். இதையடுத்து வரும் ஜூலை 23ம் திகதி இப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் என்னதான் இருக்கிறது என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.