பிரிட்டனில் கொரோனா மூன்றாவது அலை குறித்த விழிப்புணர்வு; விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

Date:

பிரிட்டனில் தற்போது கொரோனா வைரஸின் மூன்றாவது அலை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல முக்கிய பல்கலைக்கழகங்களில் விஞ்ஞானிகள் இதுகுறித்து போரிஸ் ஜான்சன் அரசுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

சமீபத்தில் பிரிட்டனில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை ஓய்ந்து உள்ள நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன. பொருளாதாரத்தை மீட்டெடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில் பிரிட்டன் விஞ்ஞானிகள் ஊரடங்கைத் தளர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ள போதிலும் ஊரடங்கைத் தளர்த்துவதால் மூன்றாம் அலையில் மேலும் பலர் வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு மரணம் அடையவும் வாய்ப்புள்ளது என எச்சரித்துள்ளனர். வரப்போகும் மூன்றாம் அலையை அடுத்து தற்போது பொதுமக்கள் மற்றும் அரசு ஆகியவை விழித்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர். பிரிட்டனில் பெரும்பாலான மக்களுக்கு தடுப்பு மருந்து 2 டேஸ் செலுத்தப்பட்டுவிட்ட நிலையில் மூன்றாம் அலை தாக்கத்தின்போது அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

நாடாளுமன்றத்தில் எனது இறுதிநாட்கள் இவை: ஊசி அர்ச்சுனா!

தனது அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசிய யாழ் மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற...

ஹோமாகம தலைக்கவச தொழிற்சாலையில் தீ: 5 பேர் பலி

இன்று காலை (21), ஹோமாகம தொழிற்பேட்டையில் உள்ள தலைக்கவசத் தொழிற்சாலை ஒன்றில்...

அதிபர்களுக்கு அநீதி : கிழக்கு ஆளுநர் செயலகம் முன்னாள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடங்கியது!

கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக கடமைநிறைவேற்று அதிபர்களாக பணியாற்றி வரும் கல்வியாளர்களுக்கு இழைக்கப்பட்டுவரும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்