பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை காவ்யா அறிவுமணி வெளியிட்டு இருக்கும் வீடியோவை பார்த்து அவர் நயந்தாரா போல இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது முல்லை என்ற ரோலில் நடித்து வருகிறார். அதற்கு முன்பு விஜே சித்ரா தான் முல்லையாக நடித்து வந்தார். சித்ரா தற்கொலைக்கு பிறகு காவ்யா அந்த ரோலில் நடித்து வந்தார். ஆரம்பத்தில் அவரை ரசிகர்கள் விமர்சித்தாலும், அதற்கு பிறகு அவரை ஏற்றுக்கொண்டனர்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் காவ்யா அறிவுமணிக்கு அதிகம் ரசிகர்கள் தற்போது கிடைத்திருக்கிறார்கள். அவருக்கு ஏழரை லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் இருக்கிறார்கள்.
இந்நிலையில் தற்போது காவ்யா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கும் வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. திருநாள் படத்தில் நயன்தாரா பாவாடை தாவணியில் இருப்பது போல காவ்யா தாவணியில் இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
அதை பார்த்த நெட்டிசன்கள் ‘நயன்தாரா மாதிரியே இருக்கியேமா’ என கமெண்டில் கூறி வருகின்றனர்.