26.6 C
Jaffna
January 1, 2025
Pagetamil
இந்தியா

திருமணம் முடிந்ததும் மணப்பெண்ணின் காலில் விழுந்த மணமகன் – வைரலாகும் புகைப்படம்!

சமீபத்தில் திருமணம் முடிந்தவுடன் மணமகன் மணமகளின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து விரிவாக காணலாம் வாருங்கள்.

இந்திய திருமணங்களில் பெரும்பாலும் திருமணம் முடிந்தவுடன் மணப்பெண், மணமகனின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கும் வைபவம் இருக்கும். இது தனது வாழ்க்கை இனி கணவனுடன் தான் இருக்கப்போகிறது என்பதால் அவரது ஆசிர்வாதம் தேவை என இந்த கலாச்சராம் பரவலாக இந்தியா முழுவதும் இருக்கிறது. பொதுவாக இந்து மத திருமணங்களில் இந்த கலாச்சரம் அதிகமாக கடை பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் வட மாநிலத்தில் நடந்த ஒரு திருமணத்தில் இதற்கு நேர் மாறாக மணமகன் , மணப்பெண்ணின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

டாக்டர் அஜித் வர்வாந்கர் என்பவர் இந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த ட்வீட் தான் தற்போது வைரலாக பரவி வருகிறது. அதில் அவர் மணமகன் என் மணமகளின் காலில் விழுதார் என்பதற்கான 9 காரணங்களை பட்டியலிட்டுள்ளார். அதன் தமிழ் ஆக்கத்தை கீழே காணுங்கள்

1. என் சந்ததியை தொடரப்போகிறவள்

2. என் வீட்டிற்கு லட்சுமியை கொண்டு வரப்போகிறவள்

3. என் பெற்றோரை அவளது பெற்றோராக மதிக்கப்போகிறவள்

4. என்னை தந்தையாக்கி மகிழ்விக்கப்போகிறவள்

5. பிரசவத்தின் போது என் குழந்தைக்காக மரணத்தை தொட்டு திரும்ப போகிறவள்

6. என் வீட்டிற்கு அஸ்திவாராமாக போகிறவள்

7. அவர் நடத்தையால் சமூகத்தை எனக்கான அங்கீகாரத்தை தரப்போகிறவள்

8. என் பெற்றோருக்கு பிறகு என்னுடன் பயணிக்கப்போகிறவள்

9. எனக்காக அவளது பெற்றோரை பிரிந்து வரப்போகிறவள்

இவை எல்லாம் செய்யும் அவளுக்கு, நான் இந்த மரியாதையை கூட செய்யமாட்டேனா? இதில் வெட்கப்பட என்ன இருக்கிறது. காலில் விழுவதற்கு வயது ஒரு பொருட்டு அல்ல

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த ட்வீட் தற்போது வைரலாகி பலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது குறித்த உங்கள் கருத்துக்களை எங்களுக்கு கமெண்டில் சொல்லுங்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரூ.931 கோடி சொத்து: இந்தியாவின் பணக்கார முதல்வர் சந்திரபாபு நாயுடு

Pagetamil

தடையை மீறி போராட்டம்: சென்னையில் சீமான் கைது

Pagetamil

சென்னையில் மாணவியை ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற வழக்கில் முன்னாள் காதலருக்கு தூக்கு தண்டனை

Pagetamil

பாமக உட்கட்சி பிரச்சினை குறித்து மற்றவர்கள் பேச தேவையில்லை: அன்புமணி விளக்கம்

Pagetamil

75000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி

east tamil

Leave a Comment