கன்னடத்தில் வெளியான ‘பீர்பால்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் சாந்தனு நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.கன்னடத்தில் ஜி ஸ்ரீனிவாஸ் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான பீர்பால் படத்தின் முதல் பாகம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படம் ட்ரைலாஜி எனப்படும் மூன்று பாகங்களைக் கொண்ட தொடராக உருவாக இருக்கிறது. அதில் முதல் பாகமாக ஃபைன்டிங் வஜ்ரமுனி வெளியாகியது.
தற்போது இந்தப் படம் தமிழில் ரீமேக் ஆக இருப்பதாகவும், அதில் நடிகர் சாந்தனு நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்தப் படம் ‘மதியாளன் வழக்கு 1’ என்ற பெயரில் உருவாக உள்ளது. க்ரிஷ் இந்தப் படத்தை இயக்கவுள்ளார். படம் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1