தற்போது கடலில் பிடிபட்ட மீன்கள் மனித நுகர்வுக்கு உகந்ததா என்பதை விஞ்ஞான சோதனைகளை மேற்கொண்டு தீர்மானிக்கும்படி,ஜே.வி.பி கோரிக்கை விடுத்துள்ளது.
ஜேவிபி பிரச்சார செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இது தொடர்பாக தெரிவிக்கையில், மீன் நுகர்வு குறித்த மக்களின் அச்சத்தை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.
மீன்களில் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் காணப்படுகிறதா என்பதை மீனவர்களால் தீர்மானிக்க முடியாது, இது தொடர்பாக சோதனைகளை நடத்துவது மீன்பிடி அமைச்சின் மற்றும் அரசாங்கத்தின் பொறுப்பாகும். துல்லியமான தரவை பொதுமக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
தீவிபத்தால் ஏற்பட்ட சேதங்களை பணத்தை கொடுத்து நிவர்த்தி செய்ய முடியாது, இருப்பினும் அரசாங்கம் இந்த விஷயத்தில் மெதுவான அணுகுமுறையை கடைப்பிடிக்கிறது.
தீவிபத்துகளால் மீன்பிடி சமூகம் கடுமையாக சுமக்கப்பட்டுள்ளன, மேலும் பல்வேறு வானிலை மாற்றங்கள் காரணமாகவும் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பேலியகொட கோவிட் -19 கொத்தணி என பெயரிடப்பட்ட இரண்டாவது கொரோனா வைரஸ் அலை மீன்பிடித் தொழிலையும் பாதித்தது, பேலியகொட மீன் சந்தை மூடப்பட வேண்டியிருந்தது பயத்தினால் பொதுமக்கள் மீன் நுகர்வு குறைந்தது என்றார்.