சீனாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா ; மக்களுக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதித்தது சீனஅரசு!

Date:

சீனா இன்று அதன் தெற்கு மாகாணமான குவாங்டாங்கில் கொரோனா வைரஸ் பாதிப்புகளின் அதிகரிப்பால் பயணக் கட்டுப்பாடுகளை மீண்டும் விதித்தது. மக்கள்தொகை அதிகமுள்ள குவாங்டங்கில் இருந்து வெளியேறும் எவரும் வைரஸ் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று சீன அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

ஹாங்காங்கின் எல்லையான குவாங்டாங், நேற்று நள்ளிரவு முதல் 24 மணி நேரத்தில் 20 புதிய உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளை பதிவு செய்தது. உலகின் பல இடங்களுடன் ஒப்பிடும்போது குவாங்டாங்கின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. எனினும் சீன அரசு தொற்று மேலும் பரவாமல் இருக்க கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இரவு 10 மணிக்குப் பிறகு விமானம், ரயில், பஸ் அல்லது தனியார் கார் மூலம் குவாங்டாங்கிலிருந்து புறப்படும் மக்கள், கடந்த 72 மணி நேரத்திற்குள் ஒரு நியூக்ளிக் அமில பரிசோதனையின் முடிவுகளை வழங்க வேண்டும் என்று மாகாண அரசாங்கம் அறிவித்தது. முக்கிய சாலைகளில் லாரி ஓட்டுநர்களுக்கான சோதனை நிலையங்கள் அமைக்கப்படும் என்று அது மேலும் கூறியது.

15 மில்லியன் மக்களைக் கொண்ட வணிக மையமான மாகாண தலைநகரான குவாங்சோ, மே 21 முதல் அங்கு பெருகிவரும் நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்ட பின்னர் வெகுஜன சோதனைக்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த மார்ச் மாதம் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி இந்த வைரஸை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக அறிவித்த பின்னர், சீனா உள்நாட்டு பயணத்திற்கான பெரும்பாலான கட்டுப்பாடுகளை தளர்த்தியது. வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு மட்டும் கொரோனா சோதனைகளை மேற்கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

விசாரணையென்றதும் எகிறியதா இதயத்துடிப்பு?: மலைவிழுங்கி மகாதேவனின் மனைவியின் சிங்கப்பூர் திருகுதாளம் அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, கொழும்பு நிதிக்குற்றப் புலனாய்வுப்...

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை படகுச் சேவைக்கான நிதியுதவி இந்தியா மீண்டும் நீட்டித்துள்ளது

நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையிலான பயணிகள் படகு சேவைக்கான நிதியுதவியை இந்திய...

வீடு மாறி குண்டடித்த இருவரும் கைது!

தெஹிவளை, சிரிசங்கபோ மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் கைக்குண்டு வீசப்பட்டதில் இரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்