கொரோனாவால் இறந்தவர்களின் உடலை தகனம் செய்ய பணம் அறவீடு!

Date:

வவுனியா மற்றும் மன்னாரில் கோவிட் -19 வைரஸின் தாக்கத்திற்கு உள்ளாகி இறந்தவர்களின் உடலினை தகனம் செய்வதற்காக வவுனியா நகரசபையால் நிதி அறவிடுவது தொடர்பில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பிரதமருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.

இக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வவுனியா ,மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய முன்று மாவட்டங்களிலும் கோவிட்-19 வைரஸின் நோய் தாக்கத்திற்குள்ளாகி இறப்பினை தழுவி கொண்டவர்களின் உடலினை தகனம் செய்வதற்கு வவுனியா நகரசபையினால் நிதி அறவிடப்படுகிறது.

இந்த மூன்று மாவட்டங்களிலும் இந்த வைரஸின் நோய் தாக்கத்திற்குள்ளாகி இறப்பவர்களின் உடல்களினை தகனம் செய்யும் இடமாக வவுனியா மாவட்டம் அமைந்துள்ளது.

வவுனியா நகரசபை இங்கு ஒருவரை தகனம் செய்ய ரூபா 7000 அறவிட்டு வருகிறது. இன்றைய கடினமான சூழலில் வாழும் மக்களுக்கு இந்த தொகையினை வழங்குதல் என்பது இலகுவான காரியமல்ல.

எனவே இதனை சரி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என அக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

பௌத்த பிக்குகளின் ஆடை விவகாரத்தில் பணிந்தது அனுர அரசு!

சிறையில் உள்ள பௌத்த பிக்குகள் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கோ அல்லது பிற நோக்கங்களுக்காகவோ...

கிரியெல்லவின் கருத்திற்கு மனோ எதிர்ப்பு

கண்டியில் மகாநாயக்க தேரரைச் சந்தித்தபோது, ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சியின் சிரேஷ்ட...

23,006 ஆசிரிய23,006 ஆசிரியர் வெற்றிடங்கள்: முதற்கட்ட நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்ற பட்டதாரிகளின் பட்டியல் வெளியீடு!

இலங்கை ஆசிரியர் சேவையில் நிலவும் 23,006 ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பின் முதற்கட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்