Pagetamil
இந்தியா விளையாட்டு

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன் ஷிப் போட்டியில் இந்திய வீரர் தங்கப்பதக்கம்!

நேற்று துபாயில் நடந்த ஆசிய குத்துச்சண்டை சாம்பியன் ஷிப் போட்டியில் இந்திய வீரர் சஞ்சீத் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

துபாயில் தற்போது ஆசிய குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் நேற்றுவரை 51 பதக்கங்களை வென்றுள்ளது. நேற்று ஒரே நாளில் இரு வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் ஒரு தங்கப்பதக்கத்தை இந்திய வீரர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

நேற்று நடந்த ஆண்களுக்கான 91 கிலோ எடைப் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் சஞ்சீத் 4-1 என்ற கணக்கில் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற கஜகஸ்தானைச் சேர்ந்த வாசிலி லிவிட்டை வீழ்த்தித் தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினார்.

மற்றொரு போட்டியான 52 கிலோ எடைப்பிரிவின் இறுதிச்சுற்றில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் அமித் பன்ஹால் 2-3 என்ற கணக்கில் நடப்பு உலக மற்றும் ஒலிம்பிக் சாம்பியனான ஷகோபிடின் ஜோய்ரோவிடம் (உஸ்பெகிஸ்தான்) தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கம் வென்றார்.

மேலும் ஒரு போட்டியான 64 கிலோ பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் ஷிவ தபா 2-3 என்ற கணக்கில் மங்கோலியாவின் பாதர்சுக் சின்ஜோரிக்கிடம் வீழ்ந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு மீண்டும் நோட்டீஸ்

Pagetamil

ஆளுநர் வெளிநடப்பு முதல் குரல் வாக்கெடுப்பு தீர்மானம் வரை: தமிழக சட்டப் பேரவைச் சர்ச்சை!

Pagetamil

இந்திய இராணுவ வீரர்கள் இறப்பு

east tamil

டேட்டிங் செயலியில் அமெரிக்க மாடல் என ஏமாற்றி 700 பெண்களிடம் பணம் பறித்த வாலிபர் கைது

Pagetamil

தீர்ந்தது 10 ஆண்டு தாகம்: அவுஸ்திரேலியா வசமானது போர்டர் – கவாஸ்கர் டிராபி!

Pagetamil

Leave a Comment