தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தனுஷ் – கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகி வெளிவர காத்திருக்கும் திரைப்படம் ‘ஜகமே தந்திரம்’. இந்த படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி ஹீரோயினாக நடித்துள்ளார். இதில் பிரபல பாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோவின் நடிப்பு மிரட்டுகிறது. இவர்களுடன் கலையரசன், ஜோஜூ ஜார்ஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஒய் நாட் ஸ்டூடியோஸ் சார்பில் சசிகாந்த் தயாரித்த இப்படம் வரும் ஜூன் 18ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. ஓடிடியில் வெளியாகும் ‘ஜகமே தந்திரம்’ தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொத்தம் 17 மொழிகளில் வெளியாகிறது. சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லரை நெட்பிளிக்ஸ் இன்று வெளியிட்டுள்ளது. படத்தின் ஒட்டுமொத்த டிரெய்லரும் துப்பாக்கி காட்சிகளால் அதிரடியாக காட்டப்பட்டுள்ளது. காட்சிகள் அனைத்து ஹாலிவுட் படங்களுக்கு நிகராக உள்ளது. டிரெய்லரை பார்க்கும்போதே படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.