தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,049 பேர் கைது!

Date:

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,047 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்,. 2020 மார்ச் மாதத்தில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் தொடங்கியதிலிருந்து ஒரே நாளில் அதிகமானவர்கள் கைதான சந்தர்ப்பம் ஈதவாகும்.

அவர்களில் 160 பேர் மாத்தளையிலும், 119 நிகவரெட்டியவிலும், 98 பேர் கண்டியிலும் கைது செய்யப்பட்டனர்.

ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் தொடர்புடைய குற்றச்சாட்டுக்களில் 19,102 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இன்று மேலதிக பொலிசாரும் சிறப்பு நடவடிக்கைகளுக்கு அனுப்பப்படுவார்கள்.

இதற்கிடையில், மேற்கு மாகாணத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது 4,636 முச்சக்கர வண்டிகள் பரிசோதிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறி பயணித்ததாக 17 முச்சக்கர வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு 21 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.

மேலும், மேற்கு மாகாணத்திற்கு 14 நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் 2,481 வாகனங்களில் பயணித்த 4,484 நபர்கள் பரிசோதிக்கப்பட்டதாகவும், அவர்களில் 156 பேர் அத்தியாவசிய தேவையின்றி மாகாண எல்லைகளை கடந்து செல்ல முயன்றதற்காக திருப்பி அனுப்பப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

ஹோர்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்

ஹோர்முஸ் ஜலசந்தியில் ஒரு எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரானின்...

காலாவதியான உணவுப் பொருட்கள் மீட்பு: உரிமையாளருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை!

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைப் பிரிவுக்குட்பட்ட உணவக/வர்த்தக நிலையமொன்றில்...

எனது தங்க மகனை மீட்டுத் தாருங்கள்-அனோஜனின் தாயார் ஜனாதிபதியிடம் கண்ணீர் கோரிக்கை

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் எனும் இளைஞரைப் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்