ஒன்லைன் Class: பிரதமரிடம் புகாரளித்த சிறுமி ; வைரலாகும் வீடியோ!

Date:

காஷ்மீரை சேர்ந்த 6 வயது சிறுமி நீண்ட நேரம் ஒன்லைன் வகுப்புகள் நடப்பதாகவும், குழந்தைகளுக்கு நிறைய வேலை கொடுப்பதாகவும் பிரதமர் மோடியிடம் புகாரளித்த வீடியோ ஒன்று வீடியோ வைரலாகி வருகிறது.

கொரோனா தொற்று பரவலால் உலகெங்கிலும் உள்ள மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது பலருக்கும் அன்றாட வாழ்க்கை நடைமுறையில் இருந்து பல மாற்றங்களை ஏற்படுத்தியது. பள்ளி, கல்லூரிகள் மூடியதால், குழந்தைகள் மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

பிரதமரிடம் புகாரளித்த 6 வயது சிறுமி - டுவிட்டரில் ட்ரெண்டிங் - தமிழ்நாடு

அந்தவகையில், காஷ்மீரை சேர்ந்த 6 வயது சிறுமி, நீண்ட நேர ஆன்லைன் வகுப்புகளால் விரக்தியடைந்து பிரதமர் மோடியிடம் புகாரளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 1 நிமிடம் ஓடக்கூடிய அந்த வீடியோவில் சிறுமி பேசியதாவது,

எனது ஒன்லைன் வகுப்புகள் காலை 10 மணிக்கு துவங்கி மதியம் 2 மணி வரை தொடர்கிறது. ஆங்கிலம், கணிதம், உருது மற்றும் சுற்றுச்சூழல் கல்வி அதன்பின்னர் கணினி வகுப்பும் உள்ளது. குழந்தைகளுக்கு நிறைய வேலை இருக்கிறது. சிறிய குழந்தைகள் ஏன் இவ்வளவு வேலைகளை சமாளிக்க வேண்டும்? என்ன செய்ய முடியும் மோடி ஐயா? இவ்வாறு அவர் பேசியிருந்தார்.

https://twitter.com/i/status/1399318137632268293

ட்விட்டரில் இந்த வீடியோவை 57 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்வையிட்டுள்ளனர், 5 ஆயிரம் லைக்குகளையும் பெற்றுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

ஹோர்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்

ஹோர்முஸ் ஜலசந்தியில் ஒரு எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரானின்...

காலாவதியான உணவுப் பொருட்கள் மீட்பு: உரிமையாளருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை!

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைப் பிரிவுக்குட்பட்ட உணவக/வர்த்தக நிலையமொன்றில்...

எனது தங்க மகனை மீட்டுத் தாருங்கள்-அனோஜனின் தாயார் ஜனாதிபதியிடம் கண்ணீர் கோரிக்கை

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் எனும் இளைஞரைப் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்