யாழ் நூலக எரிப்பில் 40ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு ஜேர்மனியில் நடந்தது.
யூதர்களின் மீது இன அழிப்பை மேற்கொண்டபோது ஹிட்லர் தனது நாசிப் படைகளை ஏவி யூதர்களின் படைப்புகளைத் குவித்து அழித்த இடத்தில் (Bebelplatz, Berlin ) யாழ் நூலக எரிப்பின் 40 ஆம் ஆண்டு நினைவுவேந்தலை முன்னிட்டு கண்காட்சி நிகழ்வு இடம்பெற்றது.
யாழ் நூலக எரிப்பின் 40 ஆம் ஆண்டை நினைவேந்தும் முகமாக தமிழ் இளையோர் அமைப்பினரால் இவ் நிகழ்வில் வைக்கப்பட்ட கண்காட்சியை பல வேற்றின மக்கள் பார்வையிட்டனர்.அத்தோடு அவர்கள் ஈழத்தமிழர்களுக்கு நடைபெற்ற/ நடைபெறும் இனவழிப்பை கண்டித்து தமது கருத்துக்களை பதிவுசெய்ததோடு தமிழ் இளையோர் அமைப்பினரால் மேலதிகமான விளக்கத்தையும் துண்டுப்பிரசுரத்தையும் பெற்றுக்கொண்டனர்.
நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் திடீர் என காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்து, புலிக்கொடியை அகற்றும் மாறு வேண்டிக்கொண்டனர். அதற்கு மறுப்பு தெரிவித்த தமிழ் உணர்வாளர்கள், காவல்துறைக்கு கொடி சார்ந்து விளக்கம் அளித்தனர்.
இவ்விடயம் யேர்மன் நாட்டின் பாதுகாப்பு பிரிவுக்கு தெரிவிக்கப்பட்டு, இறுதியில் காவல்துறை தமிழ் உணர்வாளர்களிடம் தமது கொடியை தொடர்ந்தும் நிகழ்வில் வைத்திருக்கலாம்,அதற்கு எவ்வித தடையும் இல்லை, தம்மால் சரியான புரிதல் இல்லாது நடைபெற்ற இடையூறுக்கு தமது கவலையை தெரிவித்தனர்.