வைத்தியசாலையிலிருந்து தப்பியோடிய கொரோனா நோயாளியும் மரணம்: யாழில் சம்பவம்!

Date:

யாழில் அண்மையில் பதிவான கொரோனா மரணங்களில் ஒன்று, யாழ் போதனா வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்ற ஒருவருடையது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அண்மைய தினமொன்றில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, உடல்நிலை மோசமடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

போதைக்கு அடிமையாகியிருந்த இந்த நபர், கொரோனா தொற்று சந்தேகத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதியாகி, சிகிச்சை பெற்று வந்தார்.

எனினும், சில நாட்களில் யாழ் போதனா வைத்தியசாலையிலிருந்து அவர் தப்பியோடினார்.

விரைந்து செயற்பட்ட சுகாதார, பாதுகாப்பு தரப்பினர் அன்றைய தினமே அவரை அள்ளிவந்து, ஓடவும் கூடாது, ஒளியவும் கூடாது என, கோப்பாய் சிகிச்சை நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அங்கு சிகிச்சை பெற்ற போது, அவரது உடல்நிலை திடீரென மோசமடைய யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றபபட்டார். அங்கு தீவிர சிகிசிசையளிக்கப்பட்டு வந்த போது, சிகிசசை பலனின்றி அண்மைய தினமொன்றில் உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், சுகாதார தரப்பினர் வழங்கும் அறிவுறுத்தல்களை பின்பற்றி, முழுமையான சிகிச்சையின் பின்னர் வெளியேறுவது குறிப்பிட்ட நபர்களிற்கும், சமூகத்திற்கும் பாதுகாப்பானது என சுகாதாரத்துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

காலிமுகத்திடல் மின்கம்பத்தில் ஏறி போராடிய இளைஞன்!

"களனி விகாரையில் தியானம் செய்துவிட்ட வந்த போது நான் பொலிசாரால் கைது...

சர்ச்சைப் பிக்கு சிறைக்குள்ளும் சலசலப்பு!

கரையோரப் பாதுகாப்புச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள...

உலகம் மிகவும் ஆபத்தானதாக மாறுகிறது: ரஷ்ய ஜனாதிபதி புடின்!

சர்வதேச நிலைமை மோசமடைந்துள்ளதாகவும், உலகம் மிகவும் ஆபத்தானதாகி வருவதாகவும் ரஷ்ய ஜனாதிபதி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்