ஜுவாலா கட்டா தன் காதல் கணவர் விஷ்ணு விஷாலுக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்தபோது எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அவர்களின் வீடியோ ஒன்றும் வெளியாகியிருக்கிறது.
விஷ்ணு விஷாலும், பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவும் காதலித்து கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களின் திருமணம் ஹைதராபாத்தில் நடந்தது. அதையடுத்து திருமண வரவேற்பு நிகச்சியும் நடைபெற்றது. கொரோனா வைரஸ் பிரச்சனையாக இருப்பதால் திருமணத்தில் இரு வீட்டாரும், நண்பர்கள் ஒரு சிலரும் தான் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஜுவாலா கட்டா தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து வருகிறார். அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் தான் விஷ்ணு விஷாலுக்கு முத்தம் கொடுத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்திருக்கிறார் ஜுவாலா கட்டா. அந்த புகைப்படத்தை பார்த்தவர்களோ, செம ஹாட், நீங்கள் இருவரும் கூட என தெரிவித்துள்ளனர்.
புகைப்படங்கள் மட்டும் அல்ல அவ்வப்போது சில சுவாரஸ்யமான வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார் ஜுவாலா. அவர் விஷ்ணு விஷாலுக்கு மாம்பழம் ஊட்டிவிட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. அந்த வீடியோவை பார்த்தவர்கள் அது ஏன் விஷ்ணு விஷால் சிலை மாதிரி நிற்கிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
Here's an adorable video of @Guttajwala feeding mangoes to @TheVishnuVishal pic.twitter.com/8EGKjmTZ8E
— Chennai Times (@ChennaiTimesTOI) May 30, 2021
கொரோனா நேரமாக இருப்பதால் திருமணம் முடிந்த கையோடு அவர்கள் தேனிலவுக்கு எங்கும் செல்லவில்லை. மாறாக குடும்பத்தாருடன் தான் நேரம் செலவிட்டனர்.
முன்னதாக திருமணத்தின்போது தன் அம்மாவுக்கு ஜுவாலா கட்டா லிப் டூ லிப் முத்தம் கொடுத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பார்த்தவர்கள் இது என்ன கொடுமை சரவணா என்று கிண்டல் செய்தார்கள்.
கெரியரை பொறுத்த வரை மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்திருக்கும் எஃப்.ஐ.ஆர். படம் ஓடிடியில் வெளியாகவிருக்கிறது. அந்த படத்தில் மஞ்சிமா மோகன் தான் விஷ்ணு விஷாலின் ஜோடி. பிக் பாஸ் புகழ் ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
எஃப்.ஐ.ஆர். படத்தில் நடித்திருப்பதுடன் தயாரிக்கவும் செய்துள்ளார் விஷ்ணு விஷால். போலீசாரால் தேடப்படும் இஸ்லாமிய வாலிபர் அபுபக்கர் அப்துல்லா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விஷ்ணு விஷால். அவரை தேடி அலையும் போலீஸ் அதிகாரியாக இயக்குநர் கவுதம் மேனன் நடித்திருக்கிறார்.