அழகியுடன் அறையிலிருந்த மேலும் 6 பேர் கைது!

Date:

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி கொழும்பு ஷாங்க்ரி-லா ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட மேலும் 6 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து ஆண்களும் ஒரு பெண்ணும் உள்ளடங்குகிறார்கள். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று பொலிசார் தெரிவித்தனர்.

முன்னதாக, பிறந்தநாள் விழாவை ஏற்பாடு செய்ததற்காக நிகழ்வு அமைப்பாளர் சந்திமல் ஜெயசிங்க மற்றும் மொடல் பியாமி ஹன்சமாலி ஆகியோரை பொலிசார் கைது செய்தனர். பின்னர் அவர்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியது.

சந்திமல் ஜெயசிங்கவின் 38வது பிறந்தநாளை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை பகல் 11 மணி முதல் முன்பதிவு செய்யப்பட்டது.

10வது மாடியிலுள்ள 1005ஆம் இலக்க அறையில் பிறந்தநாள் நிகழ்வு நடந்தது. ஹொட்டலிற்கு பொலிசார் வந்ததை அறிந்ததும், நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் அங்கிருந்து வெளியேறி சென்று விட்டனர். சந்திமல்- பியூமி ஜோடி மட்டுமே அறையில் இருந்தார்கள்.

சம்பவ நேரத்தில் சுமார் 12 பேர் அங்கு இருந்தனர். மற்றையவர்கள் அவ்வப் போது வந்து சென்றுள்ளனர். இவ்வாறு 50 பேர் அந்த விருந்தில் கலந்து கொண்டுள்ளனர்.

அறை கட்டணமாக ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பணம் செலுத்தப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்காவில் சிறிய விமானம் விபத்து – குழந்தை உட்பட 6 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் இடம்பெற்ற சிறிய விமான விபத்தில் குழந்தை உட்பட...

இலங்கையில் இன்னும் அறிமுகமாகாத டெங்கு தடுப்பூசி! அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்?

இலங்கையில் டெங்கு தடுப்பூசியை அறிமுகப்படுத்துவதாக சுகாதார அமைச்சு அறிவித்திருந்த போதிலும், இதுவரை...

பௌத்த பிக்குகளின் ஆடை விவகாரத்தில் பணிந்தது அனுர அரசு!

சிறையில் உள்ள பௌத்த பிக்குகள் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கோ அல்லது பிற நோக்கங்களுக்காகவோ...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்