விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் இடையேயான காதல் முறிந்துவிட்டது என்று பேச்சு கிளம்பியது. இந்நிலையில் அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் விக்னேஷ் சிவன்.
விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் நானும் ரௌடி தான் படத்தில் நடித்தபோது நயன்தாராவுக்கு அவர் மீது காதல் ஏற்பட்டது. முதலில் காதலை ரகசியமாக வைத்திருந்தவர்கள். பின்னர் வெளிப்படையாக ஒப்புக் கொண்டார்கள். இருவரும் 5 ஆண்டுகளுக்கு மேல் காதலித்து வருகிறார்கள்.
கடந்த ஆண்டே நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் தன் காதலியுடன் சேர்ந்து மருத்துவமனைக்கு சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார் விக்னேஷ் சிவன்.
அந்த புகைப்படத்தால் பெரும் சர்ச்சை கிளம்பியது. ஊசியே இல்லாமல் ஊசி போட்டது போன்று நயன்தாரா நடித்திருப்பதாக பலரும் தெரிவித்தனர். நர்ஸ் தன் விரல்களால் ஊசியை மறைத்துவிட்டதாக நயன்தாரா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த ஊசி புகைப்படம் தொடர்பாக நயன்தாரா, விக்னேஷ் சிவன் இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டார்கள் என்று பேச்சு கிளம்பியது. அதை அவர்கள் இருவருமே கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண் படம் குறித்து இன்ஸ்டாகிராமில் அப்டேட் வெளியிட்டார் விக்னேஷ் சிவன்.
அதை பார்த்த ரசிகர்களோ, தலைவியும், விக்னேஷ் சிவனும் பிரியவில்லை. அதற்கு இந்த அப்டேட் தான் சாட்சி என்று கூறுகிறார்கள். மேலும் நயன்தாராவை விரைவில் திருமணம் செய்து கொள்ளுமாறு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கெரியரை பொறுத்த வரை நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா உள்ளிட்டோரை வைத்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கி வந்தார் விக்னேஷ் சிவன். இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் கொரோனாவின் இரண்டாம் அலை சுனாமியாக மாறியது. இதையடுத்து படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளார்.
மிலிந்த் ராவ் இயக்கியிருக்கும் நெற்றிக்கண் படத்தில் பார்வையில்லாதவராக நடித்திருக்கிறார் நயன்தாரா. அந்த படத்தை விக்னேஷ் சிவன் தான் தயாரித்துள்ளார்.
எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் நெற்றிக்கண். இதையடுத்து அந்த படத்தின் கயாரிப்பாளரை சந்தித்து அனுமதி பெற்றி நெற்றிக்கண் என்கிற தலைப்பை பயன்படுத்தியிருக்கிறார்கள்.