யாழ் போதனா வைத்தியசாலையில் மேலும் 5 கொரோன மரணங்கள் பதிவாகியுள்ளன. இன்று 3 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
நேற்று நள்ளிரவு கொழும்புத்துறையிலுள்ள தனது வீட்டில் மயக்கமடைந்த 69 வயதான முதியவர் ஒருவர், உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், சிகிச்ச பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.
நெடுந்தீவை சேர்ந்த 70 வயதான ஒருவர் வீட்டிலேயே உயிரிழந்த நிலையில் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
காரைநகரை சேர்ந்த 45 வயதான ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
குருநகரை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தார். 71 வயதான அவர் மூச்செடுக்க சிரமப்பட்ட நிலையில், கடந்த 29ஆம் திகதி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களில் உயிரிழந்தார். அவரது உடல் இன்று தகனம் செய்யப்பட்டது.
மன்னாரை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தார். சிறுநீரக நோயினால் அவதிப்பட்டு வந்த 39 வயதான ஒருவரே உயிரிழந்தார்.